எழுது எழுது.. பாண்டியாவுக்கு "அப்பாலஜி லெட்டர்" எழுது.. இந்தியா திரில் வெற்றி.. டிரெண்டான செம மீம்ஸ்
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டி 20 உலகக் கோப்பை பைனலில் இந்திய அணி வென்றதை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 9 ரன்கள், பண்ட் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. முக்கியமாக ரோஹித் சர்மாவின் ஆட்டம்தான் நேற்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ரோஹித் சர்மா இந்த சீசன் முழுக்க சிறப்பாக ஆடினார். ஆனால் நேற்று அவர் அவுட் ஆக.. சீசன் முழுக்க சொதப்பிய கோலி நேற்று மட்டும் நம்பிக்கை அளித்தார்.
சூர்யா குமார் யாதவும் 3 ரன்களில் அவுட் ஆக அதன்பின் அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். கோலி மெதுவாக ஆடி அரைசதம் அடிக்க, 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார்.
கோலி அதிரடி: அப்படி இருக்க கோலி 50 ரன்களுக்கு பின் வேகம் காட்ட தொடங்கினார். 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக இல்லை., துபே கடைசியில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இதனால் இந்திய அணி 176-7 ரன்கள் எடுத்தது. ஆனாலும் இந்திய அணி 15- 20 ரன்கள் குறைவாக எடுத்து இருந்தது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தின் பிட்ச் பேட்டிங் பிட்ச். சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. இது ஸ்லோ பிட்ச் கிடையாது. ஆனால் இந்திய அணி ஸ்லோ பிட்ச் போல் ஆடியது.
தென்னாபிரிக்க அணி அதிரடி: இதன்பின் இறங்கிய தென்னாபிரிக்க அணியில் அடுத்தடுத்து ஹென்றிக்ஸ், மார்க்கரம் அவுட் ஆக டி காக், ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர்.
ஸ்டப்ஸ் 31, டி காக் 39 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தது. வெறும் 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன்கள் களாசன் எடுக்க ஆட்டம் அப்படியே தென்னாப்பிரிக்க அணி பக்கம் சென்றது. அதிலும் 2 ஓவருக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்கா வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் தென்னாபிரிக்கா தோல்வி அடைந்தது இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
கடைசி 4 ஓவர்களில் அடுத்தடுத்து தென்னாபிரிக்கா விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவர்களில் 1,2,0,0,1,0,W,0,1,1,1,1,0,0,1,W,0,1,0,0,1,2,1,0,0,4,B1,L1,WD,W,1. ரன்களை மட்டுமே தென்னாபிரிக்கா எடுத்தது. ஒரு சிக்ஸ் கூட, ஒரே ஒரு பவுண்டரி மட்டும் போக, 3 விக்கெட் விழுந்தது ஆட்டத்தை தென்னாபிரிக்கா கையில் இருந்து எடுத்து இந்தியாவிடம் கொடுத்தது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 176-7 ரன்களை எடுத்தது. இதையடுத்து இறங்கிய தென்னாபிரிக்கா திரில் ஆட்டத்தில் 169-8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications