அப்போ அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி? நீ உபியா? நானும் உபிதான்? டிரெண்டான தேர்தல் ரிசல்ட் மீம்ஸ்
சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மெஜாரிட்டி இல்லை: இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம் என்ற நிலை உள்ளது.
மீம்ஸ்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அதன்படி, இந்த எலெக்சன்னால நான் ஒன்னு கத்துக்கிட்டேன்... என்னது.. நைட் ரெண்டு மணிக்கு யாரையும் எழுப்பி யோசன கேக்க கூடாது... என்று மீம் போட்டுள்ளனர்.

அதேபோல் வீட்டுக்கு E.D Raid இப்போ அனுப்பு பார்க்கலாம்.. என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஜீ நான் தூங்க போறேன்... வேனா இங்கேயே படு.. என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

நீயும் உபி யா? நானும் உபி என்று திமுக உடன் பிறப்புகளையும், உத்தர பிரதேசத்தில் பாஜக தோல்வி அடைந்ததையும் ஒப்பிட்டு உள்ளனர்.

அதேபோல் அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்ததை குறிப்பிட்டு ராமர் கோவில் வேலை செய்யல பார்த்திபன் என்று மீம் போட்டுள்ளனர்.

எலெக்சனுக்கு முன்னாடி கோயம்புத்தூரில் எந்த காலேஜ் வாசலில் நின்னு கேட்டாலும் அண்ணாமலை அண்ணாமலைன்னு சொன்னானுங்க என்ன ஆச்சு .. சொல்லிட்டு எல்லாரும் ஓட்டு போட சொந்த ஊருக்கு போயிட்டாங்க விஜய்.. என்று மீம் போட்டுள்ளனர்.

'அவன் வந்துட்டானா?' 'யாரு?' 'யார் ஆட்சிக்கு வந்தா என்ன பாஸ், நாம உழைச்சாதான் நமக்குச் சோறுன்னு சொல்றவன்.' என்று மீம் போட்டுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு நடத்தியதையும் கிண்டல் செய்து மீம் போட்டுள்ளனர். அதேபோல் பாஜகவினர் பலர் அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கேட்டு தேர்தலுக்கு முன் போஸ்ட் செய்ததையும் விமர்சனம் செய்துள்ளனர்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications