MEMES: இனி நீ தினேஷ் கார்த்திக் இல்லை.. "பினிஷ்" கார்த்திக்.. இந்தியா வெற்றி.. இந்த மீம்ஸை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி வென்றதை வைத்து பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. 8 ஓவர்களில் 90-5 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 92-4 ரன்கள் எடுத்து வென்றது. ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் அதிரடியால் இந்திய அணி வென்றது.

 ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

நேற்று ரோஹித் சர்மாதான் இந்திய அணி வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தார். 20 பந்துகள் பிடித்த அவர் 46 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் அடக்கம். தொடக்கத்தில் இருந்தே அவர் அதிரடியாக ஆடினார். முக்கியமாக ஸ்பின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். நெட்டிசன்கள் பலர் இதை பாராட்டி வருகிறார்கள். இதை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இந்திய அணியில் ரோஹித் சர்மா ஆடியது போல ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சிறப்பாக ஆடினார். மேத்யூ வேட் நேற்று ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. 20 பந்தில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரி என்று 43 ரன்களை மேத்யூ வேட் எடுத்தார். கடந்த போட்டியிலும் மேத்யூ வேட் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது. இதை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் பினிஷ் செய்ததை வைத்து பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதற்கு முந்தைய ஆட்டங்களில் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிய கோப்பை தொடரிலும் அவர் ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்ய முடிந்தது. மற்ற போட்டிகளில் எதிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் பலர் தினேஷ் கார்த்திக்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பினிஷ்

பினிஷ்

அவருக்கு பதிலாக அணிக்குள் ரிஷாப் பண்டை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேபோல் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்களும் இதே கோரிக்கையை வைத்தனர். பண்ட் போன்ற வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டும். அவர் இளைஞர். அவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு எல்லாம் நேற்று தினேஷ் கார்த்திக் தனது ஆட்டம் மூலம் மீண்டும் பதிலடி கொடுத்தார்.

கம்பீர்

கம்பீர்

கடைசி ஓவரில் முதல் ரெண்டு பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து அசத்தினார். 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 2 பந்தில் பவுண்டரி சிக்ஸ் அடித்து அசத்தினார். முதல் பந்தில் சிக்ஸ், இரண்டாவது பந்தில் பவுண்டரி என்று மேட்சை சிறப்பாக முடித்தார். மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த பினிஷர் என்று தினேஷ் கார்த்திக் நிரூபித்தார்.

நிதாஸ் கோப்பை

நிதாஸ் கோப்பை

முக்கியமாக இவரின் ஆட்டம் நிதாஸ் கோப்பை போட்டியில் ஆடியதை நினைவுப்படுத்தியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து வங்கதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் இந்திய அணியை வெற்றிபெற வைப்பார். அதில் இருந்துதான் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அவரின் கிரிக்கெட் மாறியது அந்த நொடியில்தான். இதை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். முக்கியமாக இவரின் ஆட்டம் நிதாஸ் கோப்பை போட்டியில் ஆடியதை நினைவுப்படுத்தியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து வங்கதேச அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் இந்திய அணியை வெற்றிபெற வைப்பார். அதில் இருந்துதான் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அவரின் கிரிக்கெட் மாறியது அந்த நொடியில்தான். இதை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+