அமித்து என்னை பச்சை சட்டை போட சொல்றாங்கப்பா.. அப்போ ரிட்டயர்மெண்டா? டிரெண்டான தேர்தல் மீம்ஸ்
சென்னை; தேசிய அளவில் பாஜக தனிப்பட்ட மெஜாரிட்டி பெறாமல் போனது அந்த கட்சியின் பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் தோல்வியை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மீம்ஸ்: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

பாஜகவில் அத்வானி அரசியலில் ரிட்டயர்மெண்ட் கொடுத்த போது அவர் அணிந்து இருந்த உடை பச்சை குர்தா. அதாவது பால் பச்சை குர்தா. அதை நேற்று மோடி நாள் முழுக்க அணிந்து இருந்தார். இதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு, அமித் ஷா என்னை பதவி விலக சொல்றாங்கப்பா என்று பச்சை சட்டை போட சொல்றாங்கப்பா, என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
மோடி அருகே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் அமர்ந்து இருப்பதை பார்த்து அதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். வடிவேலுக்கு அருகே 2 பாதுகாவலர்கள் இருப்பதை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

மோடியை நிதிஷ் குமார் கண்ட்ரோல் செய்வதாக கிண்டல் செய்து, சைனாவுக்கு ஒரு போன் போடுங்க ஜி.. லேசா மெரட்டி பாப்போம்.. என்றும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
கோவையில் அண்ணாமலை தோல்வி அடைந்த காரணத்தால் அவர் அழுவது போலவும் நெட்டிசன்கள் மார்ப் மீம் வீடியோ வெளியிட்டுள்ளனர். கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார்.

பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார். எலெக்சனுக்கு முன்னாடி கோயம்புத்தூரில் எந்த காலேஜ் வாசலில் நின்னு கேட்டாலும் அண்ணாமலை அண்ணாமலைன்னு சொன்னானுங்க என்ன ஆச்சு .. சொல்லிட்டு எல்லாரும் ஓட்டு போட சொந்த ஊருக்கு போயிட்டாங்க விஜய்.. என்று மீம் போட்டுள்ளனர்.

அதோடு மோடி.. இதுல என்னையை வேறு ராமநாதபுரத்தில் நிற்க வைக்க சொன்னீங்களா என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் அதிமுக தோற்றதை வைத்து 2026 தேர்தலில்
எடப்பாடி : ஒன்னரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக.
வாரிசு 300 கோடி... எவன்லே அது என்று விஜய் அரசியலுக்கு வருவதையும் வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

உங்களிடம் இரண்டு மாடுகள் இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும் என்று மோடி கூறியதை கிண்டல் செய்து உங்களிடம் 2 கூட்டணிகள் இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும் என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications