சீண்டப்பட்ட பெண்கள்.. தாக்கப்பட்ட ஆண்கள்.. "இனி மறக்காது நெஞ்சம் ரகுமான் சார்".. டிரெண்டான மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆரில் இசையமையாளர் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடத்தப்பட்டது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பே சென்னையில் ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் மழை காரணமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

இந்த நிலையில் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்ட இசைநிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சில் நடந்த பல குளறுபடிகள் தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதை வைத்து பலர் ஆக்ரோஷமாக, கோபமாக போஸ்டுகளை செய்து வருகின்றனர்.

சிலர் இதை வைத்து மீம்களையும் போட்டு வருகின்றனர். இந்த இசைநிகழ்ச்சியில் என்ன நடந்தது. அதை வைத்து போடப்பட்ட மீம்ஸ்கள் என்னென்ன என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.

இந்த இசை நிகழ்ச்சியில் கோல்டு உள்ளிட்ட டிக்கெட் வாங்கிய பலருக்கும், சிறப்பு இருக்கை வழங்கப்பட வேண்டும். ஆனால் அப்படி வழங்கப்படவில்லை. சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் கூட இங்கே அமர்ந்து இருந்தனர்.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

விற்கப்பட வேண்டிய டிக்கெட்டுகளை விட, இருக்க கூடிய இருக்கைகளை விட கூடுதலாக 10 மடங்கு டிக்கெட் விற்றுள்ளனர். இதுவே கூட்டத்திற்கு காரணம். கூடுதல் டிக்கெட் விற்றதால் கூடுதல் மக்கள் வந்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் கூடுதல் கார்கள் வந்துள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஈசிஆர், ஓஎம் ஆர் சாலைகளில் ஏற்பட்டு உள்ளது. இதனால் நேற்று சென்னையில் ராஜிவ் காந்தி சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை, திருவான்மியூர் சாலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்தது.

இன்னொரு பக்கம் இசை நிகழ்ச்சியில் நுழைவு வாயில்கள் சரியாக அமைக்கப்படவில்லை. டிக்கெட்டை பொறுத்து நுழைவு வாயில் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. இதனால் டிக்கெட் எடுத்தவர்கள் மாறி மாறி அமர, கூடுதல் விலைக்கு டிக்கெட் எடுத்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு 3-4 மணிக்கு வந்தவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. டிராபிக் காரணமாக தாமதமாக வந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கே கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் பலர் தவறாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆண்களால் பாலியல் ரீதியாக சீண்டப்பட்டு உள்ளனர்.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

அதேபோல் ஆண்கள் பலரும் கூட போலீசார் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். போலீசார் பலரை தாக்கி உள்ளனர். முதல்வரின் கான்வாய் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடைசியில் எதிர் பாதையில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

அதேபோல் நேற்று 2 குழந்தைகள் நிகழ்வில் காணாமல் போய் உள்ளது. பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது. பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இது எல்லாம் மிகவும் கடினமான விஷயங்கள்.

ஆனால் இன்னொரு பக்கம் இந்த பிரச்சனையை எல்லாம் வைத்து சிலர் மீம்களையும் போட்டு வருகின்றனர். டார்க் காமெடி பாணியில் பலர் இதை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் மீம்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

முக்கியமாக இந்த நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்தை கிண்டல் செய்து கடுமையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர்.

Trending Tamil Memes on AR Rahman concert Marakkuma Nenjam failure

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+