ஓ மை கடவுளே.. சித்ராவுக்கு டஃப் கொடுக்கும் திருச்சி ரமேஷ்.. அதகள டப்ஸ்மாஷ்.. பீதியில் இணையம்!
டப்ஸ்மாஷ் சித்ராவுக்கும் திருச்சி ரமேஷுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Recommended Video

சென்னை: அந்தப் பக்கம் ஒரு ஆண்டி மிரட்டுகிறார் என்றால் இந்தப் பக்கம் ஒரு அங்கிள் அதகளம் செய்கிறார். டப்ஸ்மாஷ் உலகமே இவர்களின் ரகளையால் அரண்டு போய்க் கிடக்கிறது.
டப்ஸ்மாஷில் இணையதளத்தையே கலக்கி வரும் சித்ரா கோஜெனுக்கு போட்டியாக வரிந்து கட்டிக் களம் குதித்திருக்கும் திருச்சி ரமேஷ் பற்றித்தான் பேசுகிறோம்.
எங்கு பார்த்தாலும் டப்ஸ்மாஷ் மற்றும் மியூசிக்கலி அட்டகாசம்தான். நமக்கு பிடித்த கதாபாத்திரங்கள் போல் பேசுவது, நமக்கு பிடித்த டயலாக்குகளை கதாநாயகன், கதாநாயகி போல் பேசுவது, பாடுவது, ஆடுவது என இந்த டப்ஷ்மாஷ் களைகட்டி வருகிறது.
என்ன கொடுமைன்னா ஒரு ஜாலிக்காக வந்த சாப்ட்வேர் தளங்கள் இவை. ஆனால் சாணியை மிதித்து விளையாடி ஏரியாவையே கலங்கடிப்பது போல இதை மாற்றி விட்டனர் பலர்.

கலக்கல்
சமீப காலமாக மியூசிக்கலியில் அதகளம் செய்து பார்க்கும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தி வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சித்ரா காஜல் என்கிற ஆண்ட்டி.

டப்ஷ்மாஷ்
இவரது கோணங்கித்தனமான முக பாவனைகளை வைத்து செமையாக ஓட்டுகின்றனர். அதுவும் கண்ணை அப்படி இப்படி உருட்டி விளையாடும்போது நமக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய் விடுகிறது.

வெக்கமே இல்லையா
சித்ரா ஆண்ட்டி என அழைக்கப்படும் இவர் சிறிதும் சங்கோஜம் இன்றி டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என்று தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் இவருக்கு போட்டியாக வந்துள்ளார் திருச்சி ரமேஷ்.

ஆட்டம் பாட்டம்
இந்த ரமேஷ் செய்யும் அதகளம் அதற்கு மேல் உள்ளது. பெரிய சைஸ் மீசையுடன் இவர் போடும் டான்ஸ், முக பாவனைகள்.. அடேயப்பா ஒன்னாங்கிளாஸ்! விட்டால் சித்ராவை தூக்கி தூரப் போட்டு விட்டு ரமேஷ் டப்ஸ்மாஷ் ஸ்டாராகி விடுவார் போல. இவரது கெட்டப்புக்கும் வயதுக்கும் சுத்தமாக பொருத்தம் இல்லாத சினிமா பாடல்களுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து டான்ஸ் ஆடுகிறார். இது பெரும் சிரிப்பை வரவழைக்கிறது.
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது என்று லாரன்ஸ் படத்தில் வசனம் வரும். இவர்கள் இருவரின் சேஷ்டைகளைப் பார்க்கும்போது நமக்கு இந்த வசனம்தான் நினைவுக்கு வந்து போகிறது.!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications