மீம்ஸ்: கழக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளீர்களா? - TVK விருப்ப மனு கேள்விக்கு பதிலை பாருங்க
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவில் உள்ள கேள்விக்கு சோஷியல் மீடியாக்களில் உலா வரும் பதில்கள் மீம்ஸ் கண்டென்ட்டாக மாறியிருக்கின்றன.
- பெயர், வயது, கல்வித் தகுதி, தொழில் மற்றும் முகவரி
- கட்சியில் தற்போது வகிக்கும் பதவி மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை எண்

- கட்சிக்காக நீங்கள் செய்த களப்பணிகள் என்ன?
- இதற்கு முன் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா?

- உங்களுக்கு ஆதரவாக உள்ள வாக்கு வங்கி எவ்வளவு?
- நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி எது?
- அந்தத் தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்சனைகள் என்ன?
- வெற்றி பெறுவதற்கான உத்திகள் மற்றும் உங்களிடம் உள்ள பலம் என்ன?
- எக்ஸ் (X), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் நீங்கள் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறீர்கள்?
- ஏன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகிறீர்கள்? கட்சியின் கொள்கைகள் மீது உங்களுக்குள்ள புரிதல் என்ன?





என கேள்விகள் அடுக்கடுக்காக இருந்தன. இதில் 36வது கேள்வி கவனம் பெற்றிருக்கிறது. கழக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளீர்களா? என கேட்கப்பட்டிருக்கிறது. கழகமே புதியதாக தொடங்கப்பட்டதுதான். மட்டுமல்லாது, பெரிய அளவில் எந்த போராட்டத்தையும் தவெக முன்னெடுக்கவில்லை. இப்படி இருக்கையில், கழகத்திற்காக சிறை சென்றிருக்கிறீர்களா என கேட்பதெல்லாம் ரொம்ப ஓவர் என மீம்ஸ்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications