“அடுத்து என்ன? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே TVK.. அதானே?”.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, சமூக வலைதளங்களிலோ நெட்டிசன்கள் தங்களின் அசாத்தியமான நகைச்சுவை உணர்வால் தற்போதைய நிலவரங்களை மீம்களாக (Memes) மாற்றி 'மீம்ஸ் திருவிழா' நடத்தி வருகின்றனர்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சில மீம்களும், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான அரசியல் எதார்த்தங்களும் இதோ..

தவெக.. அதானே?
தவெக தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், ஏற்கனவே இருக்கும் பல திட்டங்களை புதிதாக இப்போதுதான் தொடங்குவது போல தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்கிறது இந்த மீம்.
அடுத்து என்ன? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே TVK.. அதானே?

இங்க ரெய்டு போங்களேன்
தவெக அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்கள், எம்.எல்.ஏக்கள் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், வைரலாகி வருகிறது இந்த மீம்.
அது என்னாங்கயா .. புதுசா MLA ஆனதும் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்னு ரெய்டு போறது..
அவ்வளவு நேர்மையான ஆளா இருந்தா RTO ஆபிஸ், ரிஜிஸ்டர் ஆபிஸ்னு ரெய்டு போங்களேன் பார்ப்போம்..

ஆண்கள் என்ன அனாதையா?
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், பெண்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண்கள் புலம்புவது போல ஒரு மீம்.
யாரு ஆட்சிக்கு வந்தாலும் இது பெண்களுக்கான ஆட்சினு சொல்றானுங்க.. அப்போ ஆண்கள்னா என்ன அனாதையாடா?
அதான் வாதியாரே எனக்கு புரிய மாட்டேங்குது..

என்ன பத்தி கேட்டாங்களா?
விஜய் முதலமைச்சர் ஆவதை பொறுக்கமுடியாமல் ரஜினிகாந்த் சூழ்ச்சி செய்ததாக சில கருத்துகள் வைரலான நிலையில் ரஜினிகாந்த்தே இதனை விளக்கி பேசினார். அப்போது கமல் பற்றி அவர் பேசிய விஷயத்தை கலாய்த்து இந்த மீம்..
ஒருவேல கமல் CM ஆகி இருந்தா பொறாமை வந்து இருக்குமோ என்னவோ..?
அவங்க என்ன பத்தி கேட்டாங்களா?

-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications