கடைசி ஓவர பும்ராட்ட இருந்து புடுங்கி நெக்ராட்ட குடுக்குற மாதிரி.. ரெய்டு கலகலப்புகள்! #ITRaid

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் ரெய்டு குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சென்னை, பெங்களூர் உள்பட 190 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் தங்கள் சோதனையை தொடங்கினர். அவற்றுள் 40 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.

இந்நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுல ரெய்டு

எப்போ வேணாலும் ரெய்டு வருவாங்கன்னு ரெடியா இருக்கவங்க வீட்டுல ரெய்டு போறது, கடைசி ஓவர பும்ராட்ட இருந்து புடுங்கி நெக்ராட்ட குடுக்குற மாதிரி!

இன்று ரிசப்ஷன்

கல்யாணம் நேத்து ராத்திரியே முடிஞ்சு போச்சு. இன்னிக்கு ரிசப்ஷன் நடக்குது.

ட்ராக் பண்ணிட்டாங்க...

பரோலில் விடுறா மாறி விட்டு, மொத்த சொத்து பரிமாற்றத்தையும் ட்ராக் பண்ணி , பக்காவா ஸ்கெட்ச் போட்டு தான் நடக்குது இந்த ரெய்டு ! IT Department mass pannuraanga poliye !

இப்பயும் அதேதான்


இதுக்குமுன்ன நடந்த ரெய்டால என்ன நடந்திச்சி?
ஒன்னியும்ல்ல
அதேதான் இப்பயும்.. #ITRaids பரிதாபங்கள்

புதுமண தம்பதிக்கு

புதுமணத்தம்பதிக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் #SriniWedsMahi

கெட்ட நேரம்


கடலூர் : தினகரன் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை...!!
பாவம் அடுத்தவனோட நல்லநேரம் சொன்னவருக்கு அவரோட கெட்ட நேரம் தெரில போல ..!!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans shared their comments on Twitter on the issue of IT raid in Sasikala's relatives house.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற