For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்தேகம்னு வந்துட்டா பானைய திறந்து யானைய தேடுற பரம்பரையடா நாங்கள்...!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதற்கு நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம்.

    சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் கடந்த வாரம் ரெய்டு நடைபெற்றது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு ஆளும் கட்சியினரை தவிர பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பரம்பரையடா நாங்க

    சந்தேகம்னு வந்துட்டா பானைய திறந்து யானைய தேடுற பரம்பரையடா நாங்கள்...
    #ரெய்டு

    தூங்கிவிட்டாள்

    அவளுக்கென்ன தூங்கிவிட்டாள் அகப்பட்டவர் நாங்கலல்லவா..

    எங்கெங்கோ அலைகிறார்

    இருக்குமிடத்தை விட்டு இல்லா இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே!

    தொழில் பற்று

    ஒரு அரசியல்வாதிக்கு ஆபத்து என்றால் ஒவ்வொரு அரசியல்வாதியும் குரல் கொடுக்கும் உங்க தொழில் பற்றை கண்டு நான் வியக்கிறேன்....#ரெய்டு

    கடவுள் யார் தெரியுமா

    #ஜெயலலிதா வாழ்ந்த #போயஸ்கார்டன் எனக்குக் கோயில் மாதிரி என்கிறார் மைத்ரேயன். ஆம், அவரின் கோயில் இங்கே இருக்கிறது. ஆனால் அவருடைய கடவுளோ தில்லியில் இருக்கிறார். #ADMK

    தமிழிசை என்ன கூறியிருப்பார்


    "#ஜெயலலிதா இருந்திருந்தால், தன் வீட்டிலேயே ரெய்டு நடத்திய தைரியத்திற்காக #மோடி-யை மனதார பாராட்டியிருப்பார்" அப்படின்னு
    @drtamilisaibjp அக்கா நாளைக்கு மீடியாக்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்கப் போறத நான் இப்பவே கனவுல ரசிச்சிகிட்டு இருக்கேன்!!!.

    English summary
    Netisans have shared their comment about raid in Jayalalitha's Poes Garden house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X