பழைய ஓய்வூதியம் பெற உரிமை உள்ளதா? அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய உண்மை.. ஐகோர்ட்டின் புதிய தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றியவரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கியிருந்தது தமிழக அரசு. இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க கோரி அவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு பரிந்துரை செய்த நாளை காரணம் காட்டி பழைய ஓய்வூதியம் பெற உரிமை கோர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வையாபுரி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியின்போது காலமானார். பொதுவாக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இவரது மகன் ராமராஜு என்பவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை அரசு முடிவு செய்தது.இந்த பணியினை வழங்க தலைமை மின் பொறியாளர் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி அரசுக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, ராமராஜுவுக்கு உடுமலைப்பேட்டை மின்சார பகிர்மான வட்டத்தில் பணி ஒதுக்கி கடந்த 2003-ம் ஆண்டு மே 27-ந்தேதி பணி நியமனம் வழங்கப்பட்டது.

Are you eligible for the old pension scheme Facts government employees need to know

பின்னர், 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி ராமராஜு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு தனக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், ராமராஜுவுக்கு பணி வழங்க அதே ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதியே தலைமை பொறியாளர் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி அவரது பெயர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும்" என்று 2024-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர், தலைமை என்ஜினீயர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அரசு ஊழியர்கள் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாளை காரணம் காட்டி பழைய ஓய்வூதியம் பெற உரிமை கோர முடியாது. ராமராஜுவுக்கு 2003-ம் ஆண்டு மே 27-ந்தேதி பணி நியமனம் வழங்கப்பட்டபோது, புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் கிடையாது. எனவே, பணிக்கு பரிந்துரைத்த நாளை கணக்கிட்டு பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்கிறோம்" இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சியில் தாமதமாகப் பணி ஆணை பெற்றவர்களுக்குப் பழைய ஓய்வூதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கருணை அடிப்படை நியமனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மூலம் உறுதியாகி உள்ளது. அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+