நல்லதோழி கிடைக்கணும்னு நெய்விளக்கு போட வந்தேன்டா.. என்கிட்ட போய் இப்டி கேட்குறீங்களே!
சென்னை : காதலர் தினத்தை நினைத்து இப்போதே கனவு காண ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது.
ஜனவரி மாதத்தைப் போலவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பிடித்தமான மாதம் பிப்ரவரியும் தான். அந்த மாதத்தில் அவ்வளவாக விடுமுறை இல்லாவிட்டாலும்கூட, முதல் தேதியில் இருந்து 14ம் தேதி வரை தினமும் ஒரு தினத்திற்கு பேர் வைத்து கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

இப்போதும் அப்படித்தான் பிப்ரவரி 14ம் தேதி எப்போது வரும், தன் காதலை எப்படிச் சொல்லலாம் அல்லது காதலன்/காதலியுடன் எப்படி நேரத்தை செலவிடலாம், அவர்களுக்கு என்னவெல்லாம் பரிசு வாங்கித் தரலாம் என ஒரு குரூப் யோசித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல் மற்றொரு குரூப் இந்த வருடமாவது தங்களுக்கு ஒரு நல்ல துணை கிடைக்குமா என சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதற்காக கோவிலுக்கெல்லாம் சென்று விளக்கு போட ஆரம்பித்து விட்டனர் போலும். அதனால்தான், “நல்லதோழி கிடைக்கணும்னு நெய்விளக்கு போட வந்தேன்டா.. என்கிட்ட போய் இப்டி கேட்குறீங்களே!” என நொந்தும், “பிப்ரவரி 14ம் தேதி குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதால்.. நான் அன்று பள்ளிக்கு வரமாட்டேன்!” என இப்போதே அட்வான்ஸாக விடுமுறை கேட்டும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







Click it and Unblock the Notifications
