இணையத்தை தெறிக்கவிடும் வெங்கட் பிரபு ஏஜிஎஸ் மீம்ஸ்.. அதுல சிவாவுக்கு பதிலா..வேறலெவல்
சென்னை: விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு, விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியவற்றை இணைத்து மீம்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சிவாவிற்கு பதிலாக தவறுதலாக ரோஹித்தை வைத்திருக்கிறார்கள்.
விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 68' படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 'தளபதி 68' என்ற பெயரில் (தற்காலிகமாக) இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க போகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதனால் லியோ படத்தை காண மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் 'தளபதி 68' படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. 'தளபதி 68' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சொல்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதேபோல் மற்ற கதாபாத்திரங்கள் குறித்து அறிவிப்புகள் வரவில்லை,.

இந்த சூழலில் வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் அவரது தம்பி பிரேம்ஜி, நடிகர் சிவா, வைபவ் என சென்னை 28 படத்தில் நடித்த பட்டாளங்கள் நடிப்பார்கள் அதை வைத்து நகைச்சுவைக்காக ஒரு மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ எப்படி இருக்கிறது என்றால், பகவதி படத்தில் நடிகர் விஜய்யின் டீக்கடையில் வடிவேலு வேலை செய்வார். அவரை பார்க்க சிங்கமுத்து வருவார். சிங்கமுத்து உடன் ஒருவரும் வருவார். இருவரையும் பார்த்து பூரித்து போன வடிவேலு, டீ சாப்பிட வாங்க என்று அழைப்பார்.
T68 😅 pic.twitter.com/nwccl8sVIq
— black cat (@Cat__offi) May 26, 2023
அதை விஜய்யும் இரண்டு டீ தானே என்று அனுமதிப்பார். அதன்பிறகு கிராமமே வரும். இதை வைத்து தான் வடிவேலுவை ஏஜிஎஸ் ஆகவும், சிங்கமுத்துவை வெங்கட்பிரவுவாகவும், அவர்களை விஜய் அனுமதிப்பது போலவும் மீம்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். மீம்ஸ் வீடியோவில் சிவாவிற்கு பதிலாக தவறுதலாக ரோஹித் சர்மாவை சேர்த்திருக்கிறார்கள்.அதையும் கிண்டல் செய்துள்ளார். இந்த மீம்ஸ் வீடியோதான் சமூக வலைதளத்தில் இப்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications