Memes: “ஆம்பள சிங்கம் வேட்டைக்கு போகாது.. தெரியும்ல”.. விஜய் பேச்சை விமர்சித்து தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: தவெக மாநாட்டில் பேசிய விஜய், "சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை தொட்டுக் கூட பார்க்காது." என்றார். விஜய்யின் இந்தப் பேச்சை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் 35 நிமிடங்கள் பேசினார். மாநாட்டில் பேசிய விஜய், தன்னை சிங்கம் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

சிங்கம் பற்றி பேசிய விஜய்
விஜய் பேசுகையில், "சிங்கம் எப்போதும் தனித்துவமானாது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால் அந்த சத்தத்தில் 8 கி.மீ. வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளை தான் குறிவைத்து தாக்கும். ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது.
அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் நான்கு பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் தண்ணி காட்டும்." எனப் பேசினார் விஜய்.
விஜய் பேச்சுக்கு கிண்டல்
விஜய்யின் இந்தப் பேச்சு கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இறந்த விலங்குகளையும் சிங்கம் சாப்பிடும் என்பது தான் உண்மை. மேலும், பெண் சிங்கங்களே வேட்டையாடும் இயல்பு கொண்டவை. எனவே விஜய்யின் பேச்சை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பெண் சிங்கம் தான்
யோவ் பிகிலு!
பெண் சிங்கம்தான் வேட்டையாடும்
ஆம்பள சிங்கம் புடுங்கி திங்கும்.
இந்த வெவரம் தெரியாம நீ பாட்டுக்கு டாப்
கியர்ல பேசுனா?
ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தவன
கொஞ்சம் வெளுத்துவிடுய்யா!

தப்பும் தவறுமா!
விஜய்க்கு யாரு அந்த குட்டிக்கதையை தப்பும் தவறுமா எழுதிக்கொடுத்தது??
சிங்கம் தன்னை விட வலிமையான மிருகங்களை தான் வேட்டையாடுமா? அப்ப மான், ஆடு, எருமை எல்லாம் சிங்கத்தை விட வலிமையானதா?

சிங்கம் தன்னைவிட பலசாலியான மிருகங்களை தான் வேட்டையாடும் -விஜய்
இவர் டிஸ்கவரி சேனலே பார்த்திருக்க மாட்டார் போல தெரியுது.
இவன் ஆம்பள சிங்கம் டா.. 🔥
— சரண்யா (@saranya121289) August 21, 2025
ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது தெரியும் ல...😏
அண்ணா சமமா பங்கீட்டு துன்னுட்டு தூங்கிடுவாரு... 😂
என் தலைவனோட timing.. 🙌 pic.twitter.com/Hy6qXMl2ZK
இவன் ஆம்பள சிங்கம் டா.. 🔥
ஆண் சிங்கம் வேட்டைக்கு போகாது தெரியும் ல...😏
அண்ணா சமமா பங்கீட்டு துன்னுட்டு தூங்கிடுவாரு... 😂
சிங்கம் வேட்டையாட மட்டும் தான் வெளியே வரும்
— Arulkumar Karuppannan (@ArulkumarBjp) August 21, 2025
சும்மா சும்மா வராது 🤣😆🤣👇🏻👇🏻🥹🥹😱😱😱🙄🙄🐿️🐿️🐿️ pic.twitter.com/35yJzdJjWJ
சிங்கம் வேட்டையாட மட்டும் தான் வெளியே வரும்
சும்மா சும்மா வராது

"National Geography சேனல் தொடர்ந்து பார்த்து வந்தாலே இன்னும் சரியாக சிங்கம் கதையை சொல்லியிருக்கலாம். இன்னும் நான்கு மாதங்கள் காலம் இருக்கு. நல்லா படிச்சு வந்து அடுத்த மாநாட்டில் கதை சொல்லுங்க."












Click it and Unblock the Notifications