'ஒரே வாரத்தில் திமுக கூட்டணியை மொத்தமாக உடைச்சி.. அதிமுகவை பிளந்து'.. விஜய்க்கு அரசியல் தெரியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஏன்டாப்பா ஒருவாரத்துக்குள்ள திமுக கூட்டணிய மொத்தமா உடைச்சி, அதிமுகவை இரண்டா பொளந்துவிட்டு, ஆட்சியில உட்கார்ந்திருக்க..உனக்கு அரசியல் தெரியாது என்று எங்களையும் இவ்ளோ நாள் நம்ப வச்சிருக்கியே' என்று சினிமா பாணியில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த மீம்ஸ் வடிவ புகைப்படத்தில் இருந்து முற்றிலும் உண்மை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் எடுத்த ஒவ்வொரு முடிவுவும் மிகவும் ஆச்சரியமானது..

தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் இரண்டு வருடம் முன்பு தான் ஆரம்பித்தார். அவர் சந்தித்த முதல் தேர்தலே 2026 சட்டசபை தேர்தல் தான். வேட்பாளர்களை போட முடியுமா... வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாங்கி கொண்டு விண்ணப்பிக்க மாட்டார்கள்..விசிலடிச்சான் குஞ்சுகள், தற்குறிகள் என பல்வேறு விமர்சனங்களை ஆளும் கட்சியாக இருந்த திமுக, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவினர் வைத்தனர்.

Vijay s Masterstroke Breaking DMK Alliance amp amp Splitting AIADMK in a Week Who Said He Lacks Politics

குறிப்பாக திமுகவினர் விஜய் குறித்தும், அவரது கட்சியினர் குறித்தும் மிகவும் கடுமையான மொழியில் பதில் அளித்தனர். விஜய்க்கு அரசியல் தெரியாது... விஜய் கட்சியினருக்கு ஒன்றும் தெரியாது.. இவர்களை நம்பி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். வேண்டுமானால் விஜய் பெரம்பூரில் மட்டும் ஜெயிப்பார்.

திருச்சி கிழக்கில் எல்லாம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. இனிகோ இருதயராஜ் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர்.. அங்கு வந்து நிற்கிறார் என்று திமுகவினர் கிண்டலும் செய்தனர். கருத்துக்கணிப்புகள் கூட பெரிதாக விஜய்க்கு சாதகமாக வரவில்லை.. விஜய் கணிசமான வாக்கு சதவீதம் பெறுவார். 2 முதல் 4 தொகுதிகளில் வெல்லலாம் என்றே கூறப்பட்டது. ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் முன்னாள் டிஜிபி ரவி என இரண்டே கணிப்பை தான் விஜய் அதிக இடங்களை பிடிப்பார் என்று கூறியது. அவர்களை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்கள்.

விஜய் ஒரு பிரச்சாரத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு விஜய், உசிலம்பட்டி விஜய் என ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் தான் நிற்பதாக வாக்குறுதி தந்தார். எந்த வேட்பாளராக இருந்தாலும் விஜய் நிற்பதாக விசிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மக்களுக்கு வேட்பாளர் யாரையும் பெரிதாக தெரியாது. எந்த வேட்பாளரையும் பெரிய அளவில் கள பிரச்சாரத்தில் பார்க்கவில்லை மக்கள். ஏன் வாக்குச்சாவடியில் கூட தவெக பூத் ஏஜெண்டுகள் பெரிய அளவில் இல்லை.. ஆனால் விசிலுக்கு விழுந்த வாக்கால், விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களில் வென்றது.

விஜய் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீக் என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார். அதாவது திமுக கூட்டணியை மொத்தமாக உடைத்து ஆட்சியமைத்துள்ளார். பிரேமலதா ஒருவரை தவிர அத்தனை பேரும் ஸ்டாலினை விட்டுவிட்டு விஜய் பக்கம் வந்துவிட்டனர்.

அடுத்ததாக அதிமுக கூட்டணியில் விஜய் கைவைக்கவில்லை..பரவாயில்லை என்று ஆறுதல் அடைந்தவர்களுக்கு பெரிய ட்விஸ்ட் விஜய் கொடுத்தார். அதிமுக என்ற கட்சியையே இரண்டாக உடைத்து தன் பக்கம் மெஜாரிட்டி அணியை கொண்டுவந்துவிட்டார். அத்துடன் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று கூறி அதிர வைத்துள்ளனர். மொத்தத்தில் விஜய், பதவியேற்று இரண்டு நாள் கூட ஆகவில்லை.. இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பை கூட நடத்தி முடிக்கவில்லை. அதற்குள் திமுக கூட்டணியை மொத்தமாக உடைத்து, அதிமுகவை இரண்டாக பிளந்துவிட்டதாக நெட்டிசன்கள் வாயை பிளக்கிறார்கள்.

'ஏன்டாப்பா ஒருவாரத்துக்குள்ள திமுக கூட்டணிய மொத்தமா உடைச்சி, அதிமுகவை இரண்டா பொளந்துவிட்டு, ஆட்சியில உட்கார்ந்திருக்க..உனக்கு அரசியல் தெரியாது என்று எங்களையும் இவ்ளோ நாள் நம்ப வச்சிருக்கியே' என்று சினிமா பாணியில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+