உயிரை எடுக்க வந்த எமனுக்குக்கூட சாப்பாடு போட்ருப்பாருங்க.. கேப்டனுக்கு மீம்ஸ் அஞ்சலி!
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மரணத்திற்கு வித்தியாசமாக, நெகிழ்ச்சியான மீம்ஸ்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றாலும், எப்படியும் கேப்டன் விஜயகாந்த், 'பழைய பன்னீர்செல்வமாக' திரும்பி வருவார் என்றே அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், நேற்று முன் தினம் காலை, விஜயகாந்த்தின் மரணச் செய்தி வெளியானது.
அந்தச் செய்தியைக் கேட்டு நொறுங்கிப் போன அவரது ரசிகர்கள், தங்கள் தலைவரின் முகத்தை கடைசியாக ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என சென்னையில் குவியத் தொடங்கினார். ஊடகங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக விஜயகாந்த் பற்றிய செய்திதான்.
அவர் வாழும் போதுகூட, அவருடன் பழகியவர்களுக்கும், பயனடைந்தவர்களுக்கும் மட்டும்தான் அவரது அருமை, பெருமைகள் தெரியும். ஆனால், நேற்றும், நேற்று முன்தினமும் அவரது முகத்தைப் பார்க்க ஓடோடு வந்த மக்கள் கூட்டமும், பிரபலங்கள் அளித்த பேட்டியும் எப்படியான தான, தர்ம வாழ்க்கையை கேப்டன் வாழ்ந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டியது.
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'.. என்ற வரிகளை விஜயகாந்தின் மரணம் உலகிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டி விட்டது. கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளப் பக்கங்களிலும் கேப்டனின் மறைவு பற்றிய செய்திகளும், அவரைப் பற்றிய நெகிழ்ச்சியான தகவல்களுமே அதிகளவு பகிரப்பட்டு வந்தன.
மீமர்களும் தங்கள் பங்கிற்கு கேப்டன் பற்றிய நெகிழ்ச்சியான விசயங்களை தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications