நைட்டானா தூக்கம் வரல.. காலைலனா விழிப்பு வரல.. நம்ம வாழ்க்கை எதை நோக்கி போய்ட்டு இருக்குனே தெரியல!
மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு, செல்போன் பயன்பாடு இவற்றைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மட்டுமே கல்வி கற்று வந்த மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றன.
ஆன்லைன் என்பதால் இஷ்டத்திற்கு விளையாட்டுக் காட்டியவர்களுக்கு, படிப்பு, படிப்பு என சாக்கு சொல்லி செல்போனும் கையுமாக திரிந்தவர்களுக்கு, வேளாவேலைக்கு காபி, டீ, சோறு என சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு எல்லாம் மீண்டும் பள்ளி, கல்லூரிக்கு செல்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விசயம் தான்.
ஆனாலும் வேறு வழியில்லையே. அதிலும் செல்போனை வீட்டில் வைத்து விட்டு போக வேண்டும் என்பது ரொம்பவே கஷ்டமான விசயம்தான். காலையில் எழுந்து குளித்து பள்ளி, கல்லூரிக்கு கிளம்ப வேண்டுமே என்பதும் ஒரு சிலருக்கு கவலையாக உள்ளது. இப்படி ஆளாளுக்கு ஒரு கவலை.

இப்போது இதனைக் கலாய்த்து தான் இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications