சொன்னா கேளு தலைவா.. அந்தப் பக்கம் போகாத.. இருக்கற சோத்துலயும் மண் அள்ளி போட்ருவாங்க!
டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தமிழ் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வேண்டாம் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு மீம்ஸ் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் போன பிறகு தான் சமூகவலைதளங்களில் பேசு பொருளாவார்கள் போட்டியாளர்கள். ஆனால், பிக் பாஸ் செட்டின் வாசலில் நின்று எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படத்தால் டிரெண்டிங் ஆகி விட்டார் டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து.

வெளியில் நல்ல பெயரைச் சேர்த்தவர்கள் கூட, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கெட்ட பெயரைச் சம்பாதித்த உதாரணங்கள் பிக் பாஸ் வரலாற்றில் நிறைய உண்டு. கடந்த சீசனில்கூட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரம்யா பாண்டியன் போன்றோர் அதற்கு உதாரணம். எனவே, ஜி.பி.முத்துவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கெட்டபெயரை வாங்கி விட வேண்டாம் என்ற அக்கறை போலும் அவரது ரசிகர்களுக்கு. தங்களது கருத்தை மீம்ஸ் வாயிலாக சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக வைரலான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...













Click it and Unblock the Notifications