இவ்ளோ அடி வாங்கியும்.. நியூ இயர்க்கு பிளான் பண்றியே.. எவ்ளோ திமிர் இருக்கணும் உனக்கு?
புது வருடம் பிறப்பது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புது வருடம் பிறக்கப் போகிறதே என்ற சந்தோசத்தைவிட, 2022ம் ஆண்டும் என்னென்ன பிரச்சினைகளைக் கொண்டு வரப் போகிறதோ என மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர் மீமர்கள்.

2020ம் ஆண்டு வரை புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே மக்கள் மத்தியில் புதிய உற்சாகம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். சந்தோசமாக புதிய ஆண்டை வரவேற்கத் தயாராகி விடுவார்கள். தங்களது கஷ்டங்கள் எல்லாம் இந்த ஆண்டோடு முடிந்து விடும், பிறக்கப் போகிற ஆண்டு நிச்சயம் சந்தோசமானதாக அமையும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்பார்கள்.

அப்படித்தான் 2020ம் ஆண்டையும் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் அந்த வருடம் கொரோனா பிரச்சினை, ஊரடங்கு என படாதபாடு படுத்தி எடுத்து விட்டது. சரி, 2021வது நல்லபடியாக அமையும் என நினைத்தால், இந்தாண்டு கொரோனா இரண்டாம் அலை வந்து, முதல் அலையைவிட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

பிறக்கப் போகும் 2022வது ஆண்டாவது கொரோனா ஒழிந்து மக்கள் மீண்டும் பழைய இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அதற்கும் வேட்டு வைப்பது மாதிரி, ஒமைக்ரான் இப்போதே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. இப்படி ஆண்டிற்கு ஆண்டு கொரோனா புதிய உருவம் கொண்டு மக்களைப் பாடாய்படுத்தி வருகிறதே என்ற கவலை பரவலாக உள்ளது.

தங்களது இந்த கவலையை மீம்ஸ்களாகப் போட்டு, பிறக்கப் போகும் புத்தாண்டை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications