பை பை புரட்டாசி.. இன்னைக்கு ஒருநாள் தாண்டிட்டோம்னா நாம ஜெயிச்சிடுவோம்!
புரட்டாசி மாதம் முடிவடைவது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பிரியாணி எனப் பேப்பரில் எழுதித் தந்தாலே, அதைக் கிழித்து வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு தீவிரமான அசைவ உணவுப் பிரியர்கள் பலரை புரட்டாசி என்ற ஒரு வார்த்தை ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தது.
மற்ற நாளைக் கூட வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கடந்து சென்று விடுபவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் பொங்கத்தான் செய்தனர். இதனாலேயே வாராவாரம் புரட்டாசியைக் கலாய்த்து பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகின.

இப்போது ஒரு வழியாக புரட்டாசி மாதம் முடிவுக்கு வந்து விட்டது. பல வீடுகளில் கடைசி புரட்டாசி சனி முடிந்து விட்டதால், இன்று சட்டியில் கறிக்குழம்பு கொதிக்கிறது. ஆனால் இன்னும் சில ஸ்ரிக்ட் ஆபிசர் வீடுகளிலோ காலண்டரில் புரட்டாசி முடிந்தால் தான் கறி என்ற வார்த்தையை வாயில் சொல்ல வேண்டும் எனக் கூறி விட்டனர் போலும்.

இதனால் ஒரு மாதத்தைப் பொறுத்த அசைவப் பிரியர்கள், இந்த ஒரு நாளைக் கடக்க படாத பாடு பட்டு வருகின்றனர். இதனைக் கலாய்த்து சமூகவலைதளங்களிலும் மீம்ஸ்கள் மணமணக்கின்றன.
இதோ நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...












Click it and Unblock the Notifications