என் தலைக்கு தில்ல பார்த்தியா! திரிஷாவோடு ஜோடியாக போன விஜய்! தூய சக்தியில்லை.. காம சக்தி என விமர்சனம்
சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும், நடிகை திரிஷாவும் ஜோடியாக பங்கேற்றிருப்பது, தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான் விஜய் திரிஷாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
சோஷியல் மீடியாக்களில் விஜய் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, தன்னை தூய சக்தி என்று விஜய் கூறி வந்த நிலையில், விஜய் தூய சக்தி கிடையாது, காம சக்தி என்று சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் ஷேராகி வருகின்றன.

முன்னதாக விஜய்யின் மனைவி, சங்கீதா விவாகரத்து கோரி கொடுத்திருந்த மனு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருந்தது. அந்த மனுவில் விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த திருமணத்தை மீறிய உறவை தான் கண்டுபிடித்திருந்ததாகவும், ஆனால் அப்போது அதை கைவிட்டுவிடுவதாக விஜய் சொன்னதாகவும், ஆனால் இப்போது வரை அப்படி எதையும் செய்யவில்லை என்றும் சங்கீதா கூறியிருந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 2021ம் ஆண்டு விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இது எனது திருமணத்தின் நம்பிக்கையை உடைத்தது.

விஷயம் என்னவெனில், அந்த உறவை விஜய் முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, எந்தவித வருத்தமும் இன்றி, அந்த உறவை விஜய் தொடர்ந்தார்.
அந்த நடிகை, விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்வதும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காததும், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.

எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு ஈடான மாற்று வசதியை செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள தற்போதைய வீட்டிலேயே வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்குக்கான அனைத்து செலவுகளையும் விஜய்யே ஏற்க வேண்டும்.

தேவைப்பட்டால் இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக சம்பந்தப்பட்ட நடிகையை இணைக்க தனக்கு உரிமை வேண்டும். எங்களது குடும்ப கவுரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்க்காலம் கருதி, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக, அதாவது கேமரா முன்பு நடத்த வேண்டும். இது குறித்து சோஷியல் மீடியாக்களிலோ, யூடியூப் தளத்திலோ விவாதிக்க அனுமதி மறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
-
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications