'மனைவி ஷாப்பிங் பரிதாபங்கள்'.. வடிவேலு விஜயகாந்த் காம்பினேஷனில் வந்த கலக்கலான மீம்ஸ் வீடியோ
சென்னை: மனைவி ஷாப்பிங் பரிதாபங்கள் என்ற பெயரில் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். வடிவேலு விஜயகாந்த் காமெடியை வைத்து வெளியிடப்பட்ட வீடியோ குறித்து பார்ப்போம்.
இன்றைக்கு ஷாப்பிங் என்பது பல பெண்களுக்கு பிடித்த விஷயம்.. ஜவுளி கடை, நகைக்கடை, ஓட்டல், சினிமா, பார்க், பீச், டூர் என வாழ்க்கை முறையே பலருக்கும் மாறிவிட்டது. ஒவ்வொரு ஞாயிறும் ஆடைகள் எடுக்கவும், நகை எடுக்கவும், ஓட்டலில் சாப்பிடவும் அதிகம் பேர் செல்கிறார்கள்.

ஜவுளிக்கடைகளில் காலையில் கணவருடன் சென்றால் இரவு வரை கடையிலேயே இருக்கிறார்கள் சில பெண்கள் (எல்லாரும் இல்லை). பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட யார் என்று தெரியாமல், பேஸ்புக், இன்ஸ்டாகிராமே உலகம் என்று வாழ்கிறார்கள் பலர். அவர்களில் பலர் பேசுவது என்பதே குறைவாக உள்ளது. எப்போதும் கம்ப்யூட்டர் முன்பு வேலை.. வேலை முடிந்தாலும் வேலையைப்பற்றிய சிந்தனையே ஓடும் நிலையும், டார்கெட்டை முடிக்க வேண்டும் என்ற அழுத்தமும் அவர்களை வெகுவாக பாதிக்கிறது.
நிறைய சம்பாதிக்கும் ஆண்களும், பெண்களும் தங்கள் குழந்தைகளிடம் செலவிடும் நேரம் கூட பெரிய அளவில் குறைந்துள்ளது. எப்போது சனி ஞாயிறு வரும், எப்படியெல்லாம் அந்த விடுமுறையை கொண்டாடலாம் என்ற மனநிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். சென்னையில் இந்த நிலை கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது. விடுமுறையில் மட்டுமே வெளியில் போக முடியும் என்பதால் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று விரும்பிய உடைகள், நகைகள், செருப்பு, வளையல்கள், குழந்தைகளுக்கு பிடித்த உடைகள், அவர்களுக்கு தேவையானவற்றை வார இறுதியில் தான் வாங்குகிறார்கள். குடும்பமாக சந்தோஷமாக பேசிக்கொண்டே சாப்பிடுவதே ஓட்டலில் தான் என்கிற நிலை பல வீடுகளில் இப்போது ஏற்பட்டுள்ளது.
"மனைவி shopping பரிதாபங்கள்...!!!!" 😂😂 pic.twitter.com/4pfmB52ybH
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) February 27, 2024
தேடிச்சென்று ஷாப்பிங் செய்வது ஒருபுறம் எனில், வெளியில் போக முடியாத சூழலில் பெண்களில் பலர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா என பல ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன. இந்த தளங்களில் தங்களுக்கு, தங்கள் கணவனுக்கு பிடித்த உடைகள், செல்போன்கள், அழகு பொருட்கள், ஹெட்போன் என பலவற்றை வாங்குகிறார்கள். ஏன் மளிகை சாமான்கள் தொடங்கி உணவு வரை பல அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்க தொடங்கிவிட்டார்கள். டெலிவரிக்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் பலர் வந்து செல்வது தினசரி நிகழ்வாகிவிட்டது.
இந்நிலையில் எங்கள் அண்ணா படத்தில் வலுவேலு எப்படி எல்லாரிடமும் வம்பிழுத்து பணத்தை விஜயகாந்திடம் வாங்கித்தருவாரோ அப்படித்தான் பெண்கள் கணவரிடம் ஷாப்பிங்கிற்கு பணம் வாங்குவதாக சுட்டிக்காட்டி மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த மீம்ஸ் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.












Click it and Unblock the Notifications