நான் சுற்றி வளைச்சு பேச விரும்பல.. முகமது சிராஜ் நீ பந்து வீசுறயா.. இல்லை விஷஜந்து வீசுறயா
சென்னை: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றநிலையில், வடிவேலு வண்டுமுருகன் பாணியில் இலங்கையை கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர். அந்த வீடியோவில் உள்ள தகவலை இப்போது பார்ப்போம்,
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா, அதை தொடர்ந்து பாகிஸ்தானை வீழ்த்தியது. அதன் பின்னர் வங்கதேசத்தையும் வீழ்ததியது

அதன்பின்னர் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்தியா அதிரடியாக வென்று அசத்தியது. இன்று இலங்கை அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்தியா தான் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா இரக்கமே இல்லாமல் இறங்கி அடித்தது. மொத்தம் 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களம், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் குவித்தனர்.
மீண்டும் தலைவனோட வீடியோவை பகிர வேண்டிய சூழ்நிலை 😌#INDvsSL #WorldCup2023 pic.twitter.com/d29pIdnnAD
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) November 2, 2023
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி வெறும் 55 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது. முகமது சமி ஐந்து விக்கெட்டுகளும். முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் ஐந்து பேர் டக் அவுட் ஆனார்கள்.இரண்டு பேர் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். இலங்கை அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னே 14 என்றால் பாருங்கள்..இலங்கை எந்த அளவிற்கு மோசமாக தோற்றுள்ளது என்பது புரியும். இந்தியா அணி இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து வடிவேலு வண்டுமுருகன் பாணியில் பேசுவது போன்று மீம்ஸ் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்படுகிறது. அதில் ரசிகர் கூறுகையில், நான் சுற்றி வளைச்சு பேச விரும்பல,முகமது சிராஜை பார்த்து கேட்குறேன்.. என்ன நீ பந்து வீசுறயா.. இல்லை விஷஜந்து வீசுறயா.. நீ வீசுன வீச்சுல.. பொசுக்கு பொசுக்குன்ன போய் கிடக்காங்க.. என்ன பண்ணுனான் அப்படி என் நாட்டுக்காரன்.. பாகிஸ்தானை வின் பண்ணி குவாட்டர் பைனலுக்கு வந்தது குத்தமா..
கிரவுண்டல வேலை செய்தவர்கள் மீது காட்டிய கருணையை, கொஞ்சமாச்சும் விளையாடியவர்கள் மீது கருணை காட்டியிருக்க வேண்டாமா.. 5000 டாலரை அவங்களுக்கு கொடுத்திருக்கயே.. கொஞ்சமாச்சும் ரன் அடிக்க வாய்ப்பு கொடுத்தயா.. அதென்ன ஒரே ஓவருல நாலுவிக்கெட் எடுக்குறது.. மொத்தமாக ஆறு விக்கெட் எடுத்து வச்சுருக்க,இதெல்லாம் எதுக்காக பேசுறேன்..அவங்க அடிக்கறதுக்காவது ரன் வேணும்ல.. என்ன விளையாட்டு விளையாடுறீங்க.." என்று கேட்டிருக்கிறார் அந்த விளையாட்டு ரசிகர்..வீடியோவை நீங்களே பாருங்க...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications