சுபாஷே.. அஜீத்தே.. அபிலாஷே.. முகுந்தே.. 2024ஐ பத்தி சொல்றதுன்னா.. இம்புட்டுத்தான்!
சென்னை : 2024ம் ஆண்டு முடிந்து, 2025ம் ஆண்டு பிறக்கப் போகிறது என்பதை வித்தியாசமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இப்போதே கொண்டாடத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கின்ற போதும், புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என நினைப்பதும், ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், அந்த ஆண்டு என்ன செய்தோம் என அசை போடுவதும் நம் மக்களின் வழக்கமான செயல்களில் ஒன்று. அந்தவகையில் இந்த வருடம் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்கள் என்பதை மீம்ஸ் போட்டு மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
"சுபாஷே.. அஜீத்தே.. அபிலாஷே.. முகுந்தே.. 2024ஐ பத்தி சொல்றதுன்னா.. இம்புட்டுத்தான்!" என்ற மீம்ஸ், 'அட ஆமாம்ல..' என சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது. மஞ்சும்மல் பாய்ஸில் சுபாஷே எனக் கத்த ஆரம்பித்து, இப்போது அமரனில், 'முகுந்தே' என கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது இந்த மீம்ஸ்.
அதேபோல், "மே மாச வெயிலு.. டிசம்பர் மாச குளிரு.. இத சமாளிச்சதே சாதனைதான்.. இதுல 2024ல என்ன சாதிச்சேன்னு கேட்குறியே!" என்ற மீம்ஸ், எல்லோருக்கும் பொருந்திப் போவதாக உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications