இதெல்லாம் நியூ இயர்ல இருந்து ஜிம்ல சேரப் போறதா சொல்லி.. அப்ளிகேஷன் கொடுத்தவங்க லிஸ்ட்!
சென்னை : புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றாலே ஜிம்மில் சேர வேண்டும் என்பதுதான் பலரது முக்கியமான ரிசொல்யூசனாக உள்ளது என மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு புத்தாண்டும் புது வருடம் பிறப்பதுபோல், புதிது புதிதாய் ரிசொல்யூசன்ஸ் எடுக்க வேண்டும் என நம் மக்கள் நினைப்பார்கள். ஆனால் என்ன செய்வது கடந்த ஆண்டு அவர்கள் எடுத்த ரிசொல்யூசன்களே அப்படியே நிறைவேற்றாமல் இருப்பதால், மீண்டும் அதையே தூசி தட்டி புது ரிசொல்யூசன்களாக எடுக்க வேண்டியதாகி விடுகிறது.

இந்த ரிசொல்யூசன்களில் பெரும்பாலும் எல்லோருடைய லிஸ்டிலும் இருப்பது, 'ஜிம்முக்குப் போக வேண்டும்.. உடம்பைக் குறைக்க வேண்டும்’ என்பதுதான். ஆனால் இதற்கு எல்லோருடைய வாயும் ஒத்துழைக்காத காரணத்தால், அது நிறைவேறாத ரிசொல்யூசனாகவே ஒவ்வொரு வருடமும் இருந்து விடுகிறது. எனவே, ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜிம்முக்குச் சென்று, அந்த வருடம் கட்டணம் எவ்வளவு என்பதை மட்டும் மறக்காமல் விசாரித்து விடுவார்கள்.
சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், பேக்கேஜ் எல்லாம் எடுத்து கட்டணத்தைச் செலுத்துவார்கள். ஆனால் புத்தாண்டு பிறந்த ஒரே வாரத்தில் உற்சாகம் எல்லாம் வற்றிப் போய், ஜிம் இருக்கும் தெருவையே மறந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் தற்போது மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
“இதெல்லாம் நியூ இயர்ல இருந்து ஜிம்ல சேரப் போறதா சொல்லி.. அப்ளிகேஷன் கொடுத்தவங்க லிஸ்ட்!” என்றும், “இவரு இஷ்டத்துக்கு கண்டதை தின்னு தொப்பையை ஏத்துவாராம்.. நா காலைல எந்திரிச்சு நாய் மாதிரி ஓடணுமாம்!” என்றும் இந்த ஜிம் பிரியர்களை சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications