Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mettur Dam Water Level Today | மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றம்.

    Sep 13, 2024, 11:06 am IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 11,631 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசன மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,619 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,631 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
    Sep 11, 2024, 10:11 am IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,706 கன அடியில் இருந்து 10,642 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.14 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 84.431 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 23,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
    Sep 03, 2024, 11:00 am IST

    அணையின் நீர் மட்டம் 116.32 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 87.72 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 13,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    Aug 29, 2024, 11:19 am IST

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.96 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு என்பது 88.70 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 4551 கன அடியாக உள்ளது. காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 12,000 கன அடியாகவும் நீடித்து வருகிறது. கால்வாயில் 700 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.
    Aug 28, 2024, 1:03 pm IST

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 117.44 அடியிலிருந்து 116.96 அடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 4,898 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,551 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    Aug 21, 2024, 10:28 am IST

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8 நாட்களுக்குப் பிறகு 119.76 அடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 12,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,563 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,12,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 8 நாட்களுக்கு பிறகு 120 அடியிலிருந்து 119.76 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 93.08 டிஎம்சியாகவும் இருந்தது.
    Aug 19, 2024, 10:14 am IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,500 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Aug 14, 2024, 10:24 am IST

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 45,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 26,864 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120.05 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.55 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Aug 13, 2024, 2:09 pm IST

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.41 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து பவர் ஹவுஸ் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் மூலம் வினாடிக்கு ௫௦௦ கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Aug 12, 2024, 11:16 am IST

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20, 505 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று அதிகாலை வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த 7ம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டது. உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
    Aug 09, 2024, 10:10 am IST

    மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 5,258 கனஅடியாகச் சரிந்தது. அணையின் நீர்மட்டம் 119.59 அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
    Aug 08, 2024, 10:21 am IST

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு இன்று (ஆக.8) காலை முதல் விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 10,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 6,367 கனஅடியாக சரிந்துள்ளது. அதேபோல், நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்த நிலையில் இன்று 119.54 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்த நிலையில், 92.74 டிஎம்சியாக சரிந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
    Aug 07, 2024, 10:36 am IST

    இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைந்ததையடுத்து, 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் 8 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
    Aug 06, 2024, 6:17 pm IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவடைந்த நிலையில், திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 50,000கன அடியிலிருந்து வினாடிக்கு 26,000கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாகவினாடிக்கு 4,500கன அடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 26,000கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 93.47டி எம் சி யாக உள்ளது.
    Aug 05, 2024, 10:34 am IST

    மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 120.10 அடியாக உள்ளது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 73,330 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 70,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    Aug 01, 2024, 10:28 am IST

    இன்றைய காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Jul 31, 2024, 2:14 pm IST

    இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் 1,25,500 கன அடி தண்ணீரும், காவிரி டெல்டாவிற்கும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாகவும் திறந்துவிடப்படுகிறது.
    Jul 03, 2024, 12:11 pm IST

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1038 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 876 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 818 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 39.65 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 11.91 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    May 30, 2024, 10:23 am IST

    மேட்டூர் அணைக்கு நேற்று (மே.29) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 795 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 389 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    May 22, 2024, 2:38 pm IST

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 390 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 402 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 217 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 48.76 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 17.04 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    May 21, 2024, 12:54 pm IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியிலிருந்து 402 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 49.05 அடி. நீர் இருப்பு 17.21 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    May 04, 2024, 11:11 am IST

    இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 50 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 52.70 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 19.55 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Apr 29, 2024, 10:31 am IST

    இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 82 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 53.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 20.29 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 82 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Apr 10, 2024, 11:07 am IST

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 74 கன அடியிலிருந்து 85 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயில் இருந்து வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 57.30 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 22.71 டி.எம்.சி.யாக உள்ளது.
    Apr 06, 2024, 9:49 am IST

    வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 05) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58. 98 அடியில் இருந்து 58. 70 அடியாகக் குறைந்தது; அணையின் நீர் இருப்பு 23. 72 டி. எம். சி. யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15 கனஅடியில் இருந்து 62 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை மின் நிலையம் வழியாக குடிநீர் தேவைக்கு நீர் திறப்பு விநாடிக்கு 2, 000 கனஅடியாக உள்ளது. அணையின் கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    Mar 30, 2024, 10:34 am IST

    நேற்று காலை 29 மார்ச் 2024 நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 23 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 60.46 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 25.03 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Mar 21, 2024, 9:41 am IST

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 77 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.42 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 25.75 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Mar 18, 2024, 11:11 am IST

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 148 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 610 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 158 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.05 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    Mar 13, 2024, 10:10 am IST

    சேலம்: காவிரியில் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55 கனஅடியில் இருந்து 67 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. விரைவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
    Mar 12, 2024, 10:47 am IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.49 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 26.578 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை வரலாறு:

    சேலம்: காவிரியில் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55 கனஅடியில் இருந்து 67 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. விரைவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    எங்கு உள்ளது மேட்டூர் அணை?

    இது சேலம் மாவட்டத்தில் மேட்டூர் எனும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது.இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் மேட்டூர் அணை அழைக்கப்படுகிறது.

    எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது மேட்டூர் அணை?

    மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது.

    மேட்டூர் அணை முழு கொள்ளளவு விவரம்:

    இந்த அணையில் 93.4 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். மேட்டூர் அணையின் மொத்த உயரம் 124 அடியாகும். இந்த அணை 1700 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் 120 உயரம் வரை மட்டுமே அணையில் தண்ணீரை சேமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை வானிலை:

    மேட்டூர் அணை மலையும் காடும் சார்ந்து காணப்படுவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் குளிர்ச்சியான காற்று வீசுவதால் வெயில் தெரிவதில்லை.

    மேட்டூர் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

    சேலம் நகரத்திலிருநத்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டூரில் உள்ளது.இதன் எதிரில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் வகையில் பூங்காவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும். ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் ஆகியவை மேட்டூர் அணைக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

    மேட்டூர் அணை - பார்வையிடும் நேரம்:

    மேட்டூர் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 5 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

    Dam Water Level Today
    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+