உண்டியல் காசை தருவியா.. மாமா கேட்க.. டக்குன்னு மண்டையாட்டிய கார்விக்.. "மணப்பாறைக்குள்" ஒரு ஈர மனசு!
கொரோனா நிவாரண நிதியை 3 வயது சிறுவன் வழங்கி உள்ளான்
திருச்சி: "உண்டியல் காசை தருவியா.." என்று மாமா கேட்கவும் உடனே சரியென தலையாட்டினான் கார்விக்.. பொம்மை உண்டியலில் சிறுக சிறுக சேமித்த சில்லறை பணத்தை... கொரோனா நிவாரண நிதிக்காக தாசில்தாரிடம் வழங்கினான் 3 வயது சிறுவன் கார்விக்.. இந்த சம்பவம் மணப்பாறையை மலைக்க வைத்து வருகிறது!
உலக அளவில் மிரட்டி வருகிறது கொரோனா.. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.. குணப்படுத்த மருந்து இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மருத்துவ உபகரணங்களுக்கே செலவு அதிகமாகி கொண்டே போகிறது.

இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன... இதையடுத்து, தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் 3 வயது சிறுவனும் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை தாசில்தாரிடம் தந்து உள்ளது சிலிர்க்க வைத்துள்ளது.. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சேர்ந்த தம்பதி தேன்பாண்டியன்-ராதிகா. இவர்களின் மகன் கார்விக்.
தாய்-தந்தை இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருவதால், பன்னாங்கொம்புவில் பாட்டி வீட்டில்தான் இந்த 3 வயது சிறுவன் வளர்ந்து வருகிறான்.. கடந்த பொங்கலுக்கு கார்விக்கின் தாய்மாமா சரவணன் அவனுக்கு ஒரு உண்டியல் வாங்கி தந்தார்.. அந்த உண்டியல் பொம்மையில் இருக்கும்.. ரொம்பவும் சிறியது.. அதில்தான் பாட்டி, தாத்தா தரும் காசை போட்டு கார்விக் சேமித்து வந்துள்ளான்.
இந்தநிலையில் கொரோனா நிதி உதவிக்காக சிறுவனிடம் சென்று தாய்மாமா உண்டியல் பணத்தை தருவியா என்று கேட்டுள்ளார்.. சிறுவனும் உண்டியல் பொம்மையை எடுத்து மகிழ்ச்சியுடன் தந்துள்ளான்.. இதை சிறிதும் எதிர்பார்க்காத தாய்மாமா, குழந்தையையும், அவனது பெற்றோரையும் மணப்பாறை தாசில்தார் ஆபீசுக்கு வந்தார்.. தாசில்தார் தமிழ்கனியிடம், கார்விக் தன்னுடைய பொம்மை உண்டியலை ஒப்படைத்தான்.
அதில், வெறும் சில்லறை காசுகள்தான் இருந்தன.. மொத்தம் ரூ.715 இருந்தது... சிறுவனின் உதவும் ஆர்வத்தை பார்த்த தாசில்தாரும், அங்கிருந்த அரசு அதிகாரிகளும் நெகிழ்ச்சி அடைந்தனர்.. பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தரும் ஒரு கோடியையே ஒதுக்கீடு செய்து, அதையும் தம்பட்டம் அடித்து கொள்ளும் சில அரசியல்வாதிகள் இருக்கும்போது, சிறுவனின் இந்த செயல் மலைக்க வைக்கிறது!
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications