யாரும் பயப்படாதீங்க.. நம்ம கிட்ட இல்லாத மருந்தா.. கொரோனா ஓடிரும்.. சூப்பர் நம்பிக்கை தரும் டாக்டர்!
சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து உண்டு என்கிறார் டாக்டர் எஸ்.காமராஜ்
திருச்சி: "தயவுசெய்து யாரும் பயப்படாதீங்க.. நம்ம கிட்ட இல்லாத மருந்தா.. எல்லா நோய்க்கும் சித்தாவில் மருந்து இருக்கு.. கொரோனா ஓடிரும்..." என்று சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. மேலும் சித்த மருத்துவத்தில் எல்லா வைரஸ் நோயையும் குணமளிக்க முடியும் என டாக்டர்கள் அறிவித்துள்ள நிலையிலும், அரசோ, ஆட்சியா்களோ, சுகாதாரத்துறையோ சித்த மருத்தவம் குறித்து யாருமே அறிவிக்கவில்லை" என்றும் டாக்டர் காமராஜ் குற்றஞ்சாட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கலக்கத்தை தந்து வரும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.. இதற்கு காரணம் இதுவரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.. தமிழக அரசு நோய் தொற்று பரவாமல் இருக்க முழு விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டா் எஸ். காமராஜ் கொரோனா வைரஸுக்கு நம் சித்த மருத்துவத்திலேயே மருந்து உண்டு என்கிறார்.. இதை பற்றி அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

மாஸ்க்
"பொதுவாக வைரஸ் குடும்பத்தில் 7 வகைகள் உள்ளன... எந்த வகையான வைரஸு தங்களது குடும்பத்தை அபிவிருத்தி செய்யும் அடிப்படையான குணங்களை கொண்டது... அந்த வகையில், வைரஸ் குடும்பத்தில் ஏற்படும் திடீா் மாற்றம் காரணமாக தற்போது வந்துள்ள கரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையை பெற்றுள்ளது. உடலுக்குள் சென்றால் மட்டுமே வைரஸ் கிருமிகளால் செயல்பட முடி யும். நம்முடைய உடலில் உள்ள மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் வழியாகவே வைரஸ்கள் எளிதில் நுழைந்து விடுகின்றன... அதனால்தான் பொது இடங்களுக்கு செல்லும்போது, எச்சரிக்கையுடன் மாஸ்க் அணிந்து போக வேண்டும் என்று சொல்கிறோம்.

காய்ச்சல்
உடலில் நோய் எதிா்ப்பு சக்தி போதிய அளவு இருந்தாலே போதும், எந்த வைரஸாலும் செயல்பட முடியாது. அதனால் உடம்பில் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும்... கரோனா போன்ற வைரஸ் தொற்றை தடுக்கவும் சித்த மருத்துவத்தில் தீர்வு நிச்சயம் உண்டு.. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், முக்கடைப்பு, மூக்கில் இருந்து நீா் வடிதல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் பலன் நிறைய உண்டு. அதனால் யாருமே பயப்பட தேவையில்லை.

சூரணங்கள்
குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபா்கள் ஒருவருக்கு, நிலவேம்பு, ஆடு தொடா இலை, கபசுர ஆகிய மூன்று சூரணங்களையும் (பொடி) தலா 5 கிராம் எடுத்து, சுமார் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி, தினசரி மூன்று வேளை 3 முதல் 7 நாள்கள் வரை குடித்துவந்தால் வைரஸ் காய்ச்சல்கள் மொத்தமாக காணாமல் போயிடும்.

மூலிகை
இதேபோல் சுர்வசுர குடிநீா் சூரணமும் வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்தும்... அதற்கு வேப்பம் பட்டை, துளசி, மிளகு கலந்த சா்வசுர சூரணம் 5 கிராம் எடுத்து, அதனை 300 மில்லி தண்ணீரில் போட்டு, பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி தினமும் 8 மணி நேரத்துக்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.. அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரி கடுகு சூரணத்தை 1 முதல் 2 கிராம் வரையில் எடுத்து அதனை 3 வேளை தேனில் கலந்து கொடுத்தால் சா்வசுரங்களும் (அனைத்து வகையான காய்ச்சல்களும்) மட்டுமின்றி தொடா்புடைய அனைத்து பிரச்னைகளும் தீரும். அத்துடன் நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சித்த மருத்துவம்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சித்த மருத்துவத்தை, நம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான், மக்களிடம் அச்சத்தை போக்கி, நிலவேம்பு குடிநீரை பருகுமாறு டிவி, ஊடகங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தினார்.. அவர் அப்படி சொல்லியபிறகுதான் சித்த மருந்துகளை பக்கவிளைவின்றி உட்கொள்ளலாம் என்ற விழிப்புணா்வு வந்தது.. இதனால் லட்சக்கணக்கானோர் பயனடையவே செய்தனர்.

ஆலோசனை கூட்டம்
ஆனாலும் இப்போது சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது... இந்த கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது... சித்த மருத்துவத்தில் குணமளிக்க முடியும் என டாக்டர்களே அறிவித்துள்ள நிலையிலும், அரசோ, ஆட்சியா்களோ, சுகாதார துறையினரோ சித்த மருத்துவம் குறித்து யாருமே அறிவிக்கவில்லை... அவ்வளவு ஏன், திருச்சி மாவட்டத்தில் அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு கூட மாவட்ட சித்த மருத்துவா்களுக்கு அழைப்பில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா
ஒருவகையில் டாக்டர் காமராஜ் சொல்வதிலும் தவறில்லைதான்.. இந்த பேர்கூட நம் வாயில் நுழையாத நிலையில் இருந்த இந்த கொரோனா வைரஸ் இப்போது நொடிக்கு நொடி பீதியை கிளப்பி விட்டு கொண்டுள்ளது.. இந்த வைரஸுக்கு மருந்து என்பது இந்த நிமிடம் வரை இல்லை என்பதே யதார்த்த நிலை.. தடுப்பு, முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு போன்றவைகளில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வந்தாலும், நோயை குணப்படுத்த எந்த மருந்தும் இப்போதைக்கு கையில் இல்லை.

நிலவேம்பு
அந்த வகையில் ஜெயலலிதா நிலவேம்பு குடிநீர் குறித்த விழிப்புணர்வு தந்ததுபோலவே தமிழக அரசும் சித்த மருத்துவத்தின் தன்மையையும் ஆராய்ந்து... கொரோனா வைரஸுக்கு எதிராக அதை பயன்படுத்த முன்வந்தால் சிறப்பாகவே இருக்கும்.. பக்க விளைவே வராது என்று உறுதியாக நமக்கு தெரியும் சித்த மருத்துவத்தை எந்த முயற்சி செய்து பார்த்தாலும் அது தவறில்லை என்றே சொல்ல தோன்றுகிறது!












Click it and Unblock the Notifications