இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா.. யார் இவர்..?
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை: இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா, வழக்கறிஞராக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்கிறார். இவரே இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆவார்.
பல்வேறு கரடுமுரடான பாதைகளை கடந்த இந்த உச்சத்தை தொட்டுள்ளார் சத்தயஸ்ரீ சர்மிளா. யார் இந்த சத்யஸ்ரீ சர்மிளா? அவர் கடந்து வந்த பாதை குறித்த தகவல் இதோ..

பரமக்குடியை சேர்ந்தவர்
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யஸ்ரீ இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் பகுதியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பரமக்குடியில் முடித்தார் சத்யஸ்ரீ.

குடும்பத்தை விட்டு விலகல்
பி.காம் வரை பெற்றோருடன் இருந்து பரமக்குடியில் கல்லூரி படிப்பை முடித்தார். பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்யஸ்ரீ தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தவுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார்.

பெயருக்கு பின்னால்
பின்னர் செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் திருநங்கை சர்மிளா என்பவரின் ஆதரவில் வாழ்க்கையை தொடங்கினார் சத்யஸ்ரீ. தனக்கு ஆதரவளித்த சர்மிளாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது பெயருக்கு பின்னால் சர்மிளாவை சேர்த்துக்கொண்டார் என கூறப்படுகிறது.

சேலத்தில் சட்டப்படிப்பு
2007ஆம் ஆண்டு சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார் சத்யஸ்ரீ. ஒரு ஆணாகவே சட்டப்படிப்பை முடித்தார் சத்யஸ்ரீ.

கடந்த 30 ஆம் தேதி
36 வயதான சத்யஸ்ரீ தன்னை ஒரு வழக்கறிஞராக முன்னிறுத்த 11 ஆண்டுகள் காத்திருந்தார். திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் மன்றத்தில் தம்மை வழக்கறிஞராக பதிவு செய்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications