தமிழ்நாடு பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்ட MSME துறை எவ்வளவு முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) எண்ணிக்கையைப் பொறுத்த வரையில், தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த எம்.எஸ்.எம்.இ பங்களிப்பில் தமிழ்நாடு 15% பங்களிப்பை அளிக்கிறது. சுமார் 1 கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. இத்தகைய பங்களிப்பானது தமிழ்நாடு அரசின் 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட இன்றியமையாத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

MSME

ஏன் எம்.எஸ்.எம்.இ -க்கள் முக்கியம்?

எம்.எஸ்.எம்.இ -க்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. சொல்லப்போனால் தமிழக பொருளாதாரத்தின் அடித்தளமாகவும் செயல்படுகின்றன. இது தமிழகத்தின் ஜிடிபி-யில் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதை நேரடியாகவும், துல்லியமாகவும் கூற குறிப்பிட்ட தரவுகள் இல்லை. எனினும் மொத்த பொருளாதாரத்தில் எம்.எஸ்.எம்.இ -க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலத்தின் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தியில் சுமார் 30% சிறு குறு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. ஏற்றுமதியில் சுமார் 45% எம்.எஸ்.எம்.இ-க்கள் மூலம் நடைபெறுகின்றன. மேற்கண்ட சதவீதங்கள், தமிழக பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு எம்.எஸ்.எம்.இ -க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையே காட்டுகின்றன.

மேலும் எம்.எஸ்.எம்.இ -க்கள் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் பிரிவாக இருப்பதால், மாநிலத்தில் அதிக வேலைகளை வழங்கும் அம்சமாகவும் உள்ளது. ஜிடிபி -யில் எம்.எஸ்.எம்.இ -யின் பங்கு நேரடியாக இல்லை என்றாலும், ஒரு மாநிலத்தின் ஜிடிபியில் வேலை வாய்ப்பு. ஏற்றுமதி, உற்பத்தி, தனிநபர் வருமானம் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களாகும். ஆக எம்.எஸ்.எம்.இ -க்கள் நிச்சயம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்ட இது அவசியமான ஒன்று.

பெரும் வேலைவாய்ப்பு உருவாக்கம்!

பெரிய நிறுவனங்களை விட, எம்,எஸ்.எம்.இ -க்கள் தான் குறைந்த முதலீட்டில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்து, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது. இது தேவையை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது ஜிடிபி வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

ஏற்றுமதி வளர்ச்சி!

2025ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 33.6 லட்சத்திற்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ-க்கள் பதிவு செய்யபட்டிருந்தன. இது இந்தியாவில் உள்ள மொத்த எம்.எஸ்.எம்.இ -களில் மூன்றில் ஒரு பங்கு என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இந்த நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி சுமார் 30.5 பில்லியன் டாலர் அளவில் செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஜவுளித் துறைகள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வாகன உதிரி பாகங்கள் 35% பங்கு வகிக்கின்றன. தோல் பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. ஜவுளித் துறையில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

என்னவெல்லாம் அவசியம்?

தமிழ்நாடு தனது பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டுமானால், எம்.எஸ்.எம்.இ துறைக்கு நிதியுதவி, தொழில்நுட்ப மேம்பாடு, சந்தை அணுகல் மற்றும் புதிய திறன் மேம்பாடு ஆகியவற்றில், அதிக முதலீட்டை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.

சிறு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்காக பிணை இல்லாத கடன்களை எளிதாக பெற உதவும் வகையில், மாநில அரசின் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு வட்டி மானியங்கள் மற்றும் மூலதன மானியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது நிறுவனங்களுக்கு எளிதாக சலுகைகளுடன் கடன் கிடைப்பதை உறுதி செய்யும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான நிதி சரியான நேரத்தில் கிடைத்தாலே, அதன் வளர்ச்சி நிச்சயம் சிறப்பாக இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

வேளாண்மைத் துறைக்கு அடுத்தப்படியாக, தமிழகத்தில் மிகப்பெரிய வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு துறை எம்.எஸ்.எம்.இ ஆகும். ஆக இது மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளக்குகின்றன. இவை பெரிய நிறுவனங்களுக்கு தேவையான துணை நிறுவனங்களாக செயல்பட்டு, தொழில் சங்கிலியை பலப்படுத்துகின்றன.

தமிழகத்தின் வேலைவாய்ப்பு, தொழில் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சமச்சீரான பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றிற்கு எம்.எஸ்.எம்.இ -க்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அவை இல்லாமல் மாநிலத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவது கடினம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+