உணவுத் துறையில் MSME -க்களின் பங்கு என்ன? இத்துறைக்கான அரசின் சலுகைகள்?
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பானங்கள் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் பயனடைகின்றன. இது இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக உணவு பதப்படுத்துதல் துறையில் எம்.எஸ்.எம்.இ-க்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் மைக்ரோ லெவலில் உள்ள நிறுவனங்களின் பங்கு மிக அதிகம். உணவு பொருட்களை மதிப்பு கூட்டி அதை விற்பனை செய்வதில் பல சிறு நிறுவனங்கள் பெரிய அளவில் வர்த்தகம் செய்து பலன் அடைகிறது.

என்னென்ன பிரிவுகளில் வணிகம்?
காய்கறிகள், பழங்கள், தானியங்களை மதிப்புக்கூட்டி, அவற்றை ஊறுகாய், பழச்சாறு, ஜாம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு ஈட் உணவு பொருட்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்கின்றன.
கிராமப்புறங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், தங்கள் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து பலவற்றை உற்பத்தி செய்கின்றனர். இது பலருக்கும் வாழ்வாதாரமாக மாறியுள்ளதோடு, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவி புரிகிறது. இதில் மற்றொரு நல்ல விஷயம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக இத்தகைய பொருட்கள் வாங்கப்படுவதால், அவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக சரியான சந்தைப்படுத்தல் இல்லாவிடில் வீணாகும் பொருட்களை வைத்து, அதையும் மாற்றுப் பொருளாக மாற்றும் திறன் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது. இது உணவு வீணாதலையும் தடுக்கிறது.
உணவு பொருட்களை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஃப்ரீசிங் செய்தல், உலர்த்துதல் போன்றவற்றின் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாவதைத் தடுக்கலாம். இதன் மூலம் அவற்றின் கெட்டுப்போகும் தன்மையை நீக்கி, வாழ்நாளை அதிகரிக்க செய்வதில் எம்.எஸ்.எம்.இ-களின் பங்கு அதிகம்.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு!
மக்கள் கிராமப்புறங்களில் விவசாய வேலையை மட்டுமே நம்பியிருக்காமல், விவசாயம் அல்லாத, விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். எம்.எஸ்.எம்.இ -க்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே இது சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதோடு அவர்களை தொழில் முனைவோராக மாற்ற மானிய சலுகைகளுடன், கடனையும் கொடுத்து வர்த்தகத்தில் ஈடுபட வைக்கிறது அரசு. உணவு துறைக்கு என எம்.எஸ்.எம்.இ-க்கள் பிரத்யேகமாக பல மானிய திட்டங்களை வைத்துள்ளது. இதில் PMFME எனப்படும் சிறு உணவு பதப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு கடனுடன் இணைக்கப்பட்ட மானியம் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவையும் வழங்குகிறது.
அரசின் மானிய மற்றும் கடன் திட்டங்கள்!
PMKSY திட்டமானது உள்கட்டமைப்பு மேம்பாடு, விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் பின்சங்கிலி இணைப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதேபோன்று PLISFPI திட்டமானது இந்திய உணவு பிராண்டுகளை வெளிநாடுகளில் ஊக்குவிப்பதற்கும், சந்தப்படுத்துதலுக்கும் சலுகைகளை வழங்குகிறது.
அன்னபூர்ணா திட்டமானது உணவு மற்றும் கேட்டரிங் துறையில் தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில் முனைவோரை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது சிறு வணிகத்தை இலக்காகக் கொண்டது. நீங்கள் உணவுத் தொழில் தொடர்பான கடனைப் பெற விரும்பினால், அருகிலுள்ள அரசு அல்லது தனியார் வங்கிகளை அணுகி, அன்னபூர்ணா திட்டம் குறித்து விசாரிப்பது உதவியாக இருக்கும்.
குறிப்பாக பெண்களுக்கு என பிரத்யேகமாக இருப்பதால், மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதில் சலுகைகள் அதிகம் கிடைக்கலாம். இதுபோன்று இன்னும் பல்வேறு திட்டங்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக உள்ளன. ஆக உணவு பதப்படுத்துதல் மற்றும் பானங்கள் பிரிவில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள், அருகிலுள்ள எம்.எஸ்.எம்.இ மையங்களை சென்று விவரங்களை கேட்டறிந்து, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு உகந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். வங்கிக் கடனுக்கும் அங்கேயே விவரங்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.
ஏற்றுமதியில் எம்.எஸ்.எம்.இ-களின் பங்கு?
உணவு பதப்படுத்துதல் மற்றும் பானங்கள் ஏற்றுமதியில் எம்.எஸ்.எம்.இ-களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இந்தத் துறையின் வர்த்தக வளர்ச்சியானது, பல்வேறு சாதகமான காரணிகள் மத்தியில் வேகமாக வளர்ந்து வருகிறது.
எம்.எஸ்.எம்.இ-க்கள் பெரிய பெரிய நிறுவனங்களால் அதிகம் கவனம் செலுத்தப்படாத பிராந்திய சிறப்புமிக்க தயாரிப்புகள் (Regional Specialties), பாரம்பரியப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மசாலாப் பொருட்கள் மற்றும் உள்ளூர் இனிப்பு பலகாரங்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்தத் தனித்துவமான பொருட்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் (குறிப்பாக இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் நாடுகளில்) அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
உதாரணத்திற்கு கருப்பட்டியில் செய்யப்பட்ட பலகாரங்கள், இனிப்பு வகைகள் என பலவும், சர்வதேச நாடுகளில் கூட மிக பிரபலமாக பேசப்படுகின்றன. இவை அதிக சுவையுடன், ஆரோக்கியமானதாகவும் பார்க்கப்படுவதால், பெரிய அளவில் ஈர்க்கப்படுகின்றது. இதுபோன்ற ஏராளமான பொருட்கள் இந்தியாவில் இருந்தும், குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விவசாயப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, எம்.எஸ்.எம்.இ-க்கள் அவற்றைச் சுத்தம் செய்தல், தரப்படுத்துதல், உலர்த்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் (உதாரணத்திற்கு ஜாம், ஊறுகாய், சட்னி தயாரித்தல்) போன்ற பணிகளைச் செய்வதன் மூலம் ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்கின்றன.
சிறு, குறு நிறுவனங்கள் பெரும்பாலும் உள்ளூர் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், ஏற்றுமதி தரத்திற்குத் தேவையான பொருட்களை நம்பகமான விநியோகச் சங்கிலி மூலம் வழங்க உதவுகின்றன. இதை ஊக்குவிக்கும் விதமாக அரசின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) போன்ற திட்டத்தின் கீழ், எம்.எஸ்.எம்.இ-க்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு, தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதிக்கு ஏற்றதாக மாற்றுகின்றன.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வரும் சூழலில் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர், ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களில் அதிக கவனம் செலுத்துவதால், ஆர்கானிக், நார்ச்சத்து நிறைந்த மற்றும் இயற்கை பானங்களுக்கான சந்தையும் வேகமாக வளர்கிறது.
இந்த சூழலில் 2024-25 நிதியாண்டில் இந்திய பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி சுமார் 27 பில்லியன் டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பாசுமதி அரிசி, கடல் உணவு, மசாலாப் பொருட்கள், நிலக்கடலை, பழங்கள் மற்றும் காய்கறிகள், மற்றும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்?
பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கு பிடித்தமான ஜாம், ஜெல்லி வகைகள், மர்மலேட்,பழச்சாறுகள், பழச் சிரப்புகள் (Syrups) பழப்பசை (Pulp), உலர் பழங்கள், பழத் தோல் என பல வகையாக உற்பத்தி செய்யப்படுகின்றன. காய்கறிகளில் இருந்து ஊறுகாய், சட்னி தொக்குகள், உலர்ந்த காய்கறிகள் மற்றும் சமைக்கத் தயாரான கலவைகள், சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ், உறைந்த மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் என பலவும் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மூலம் ரெடி டு ஈட், ஊட்டச்சத்து மிக்க சத்து மாவுகள், குழந்தைகளுக்கான சத்தான உணவுகள், சமைக்கத் தயாரான இட்லி, தோசை மாவு, ரெடிமேட் சப்பாத்தி, வறுக்கப்பட்ட பொடி வகைகள், பருப்பு பொடி, ,மாவு வகைகள், பக்கோடா, முறுக்கு, மிக்சர், சீவல் என பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் உணவு தின்பண்டங்கள் என பலவும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றை பாரம்பரிய முறைப்படி, வழக்கமாக செய்வது போல் அல்லாமல், சிறு தானியங்களை பயன்படுத்தியும், இனிப்பு வகைகளை கருப்பட்டி பயன்படுத்தி தயாரிப்பதும் சமீபத்திய கால அதிகரித்துள்ளது. இது தவிர உணவு சமைக்கும் போது தேவையான சுவையான மசாலா பொடி வகைகள், பேஸ்ட்டுகள், இது தவிர சுத்தமான தேன், மூலிகை பொருட்கள் என பலவும் இந்திய எம்.எஸ்.எம்.இ-க்களால் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் பால் சார்ந்த பொருட்கள், கடல் உணவுகள், டீ, காபி, மூலிகை காபி, டீக்கள் என பலவும் இந்திய எம்.எஸ்.எம்.இ-க்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications