மதுரை டூ தூத்துக்குடி.. MSME-க்கான புதிய அடையாளமாக மாறும் தென் தமிழ்நாடு!
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு புதிய அடையாள மையமாக தென் தமிழ்நாடு வேகமாக மாறி வருகிறது. தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற பகுதிகள் இதற்கு முக்கிய காரணிகளாகவும் பார்க்கப்படுகின்றன.

தென் மாவட்டங்களின் புதிய & பழைய வணிகங்கள்!
விருதுநகர் தீப்பெட்டி, சிவகாசி பட்டாசு உற்பத்தி, மதுரை ஜவுளி, பொறியியல் போன்ற பாரம்பரிய எம்.எஸ்.எம்.இ மையங்கள் அவற்றின் இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. அதோடு புதிய தலைமுறை தொழில் முனைவோர் ஐடி மற்றும் ஐடி சார்ந்த தொழில்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பு, மருத்துவ சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் எம்.எஸ்.எம்.இ -க்களை உருவாக்கி வருகின்றனர்.
தமிழக அரசின் சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற தொழில்துறைப் பூங்காக்கள், தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்டு சிறு நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றன. மேற்கொண்டு சர்வதேச வர்த்தகத்திற்கான முக்கிய நுழைவாயிலாக செயல்பட்டு, தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி சார்ந்த சிறு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மையைத் தருகிறது. அதோடு மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சியில் உள்ள விமான நிலையங்கள், சரக்கு மற்றும் வர்த்தக இணைப்பை இன்னும் எளிதாக்குகின்றன. மொத்தத்தில் தென் தமிழகம் எம்.எஸ்.எம்.இ -க்களுக்கான அடையாளமாக மாறி வருகிறது.
முக்கிய உற்பத்தி மையம்?
தொடர்ந்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு, இப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு தென் தமிழகத்தின் சிறந்த வளமான மனித வளம், வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக வழிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன், இனி வரும் காலங்களில் நாட்டின் முக்கிய எம்.எஸ்.எம்.இ உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மற்றும் ஓசூரில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகளில், தென் மாவட்டங்களுக்கான 30,100 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மத்தியில் 46,450 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் எம்.எம்.எஸ்.இ துறையும் 1,261 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டது. இதன் மூலம் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தரவுகள் கூறுகின்றன.
ஏன் தென் தமிழகம் பெஸ்ட்?
தமிழகத்தில் ஸ்ரீ பெரும்புதூர் - சென்னை - காஞ்சிபுரம் பகுதிகளை எடுத்துக் கொண்டால், நிறுவனங்கள் புதிதாக ஆலைகளை தொடங்க, உற்பத்தி மையங்களை ஏற்படுத்த போதிய இட வசதிகள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அந்த வகையில் தென் தமிழகத்தில் ஏராளமான பகுதிகள் உள்ளன. இதுவே தொழில்துறை வளர்ச்சிக்கு மிக ஏதுவான ஒரு விஷயம் தான். மதுரை - தூத்துக்குடி வரையில் இருக்கும் தாராளமான இட வசதிகள், அதுவும் மற்ற மாவட்டங்களை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆக தொழிற்சாலைகள் அமைக்க இந்த இடங்கள் சரியாக இருக்கின்றன. அதோடு ஏற்கனவே இந்த பகுதியானது தொழில் வளர்ச்சிக்கு பேர் போன ஒன்று.
சமீபத்தில் உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின் ஃபாஸ்ட் தூத்துக்குடியில் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது. இதுபோன்ற ஏராளமான நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் ஆலையை நிறுவன விருப்பம் காட்டுகின்றன என தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ். நாயர், சமீபத்தில் ஆங்கில செய்தித் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
சிறப்பு சலுகைகள்!
தென் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக, தமிழக அரசு தென் மாவட்டங்களில் தொழில் முதலீட்டை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளையும், மூலதன மானிய திட்டங்களையும் வழங்குகிறது. குறிப்பாக நீட்ஸ் (NEEDS), UYEGP, பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தி விரிவாக்கத்தில் கவனம் என பலவும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அரசின் இதுபோன்ற திட்டங்கள், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பையும் அதிகரிக்கின்றன.
நீட்ஸ் (NEEDS) திட்டமானது புதிய தொழில் முனைவோருக்கு தேவையான நிதி உதவியை அளிக்கிறது. இந்த திட்டம் படித்த இளைஞர்களை வேலை வேலை என தேடி ஓடாமல், வேலை வழங்குபவராக மாற ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களை தொடங்க தேவையான கடன், மானியத்துடன் வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்ச மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25% பெற வாய்ப்பு உண்டு. மேலும் தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியும் வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கத் தேவையான அனுமதி சான்றிதழும் (Provisional Sanction) வழங்கப்படுகிறது.
யு.ஓய்.இ.ஜி.பி (UYEGP)- தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டம் தான் UYEGP. இது வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டமாகும். தமிழ்நாட்டில் நிரந்தர குடியிருப்பாளராக இருக்கும் நபர்களுக்கு ,மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த புதிய நிறுவனங்களை தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டத்தில், அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி பிரிவுக்கு 15 லட்சம் வரையாகும், சேவை பிரிவுக்கு திட்ட செலவு 5 லட்சம் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மானியத்தை பொறுத்த வரையில் திட்டச் செலவில் 25% வரை வழங்கப்படும். அதிகபட்ச மானிய வரம்பு 3.75 லட்சம் ரூபாயாகும். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற, பயனாளரின் வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்பு துறை: இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் ஒரு பிரத்யேகமான டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரியல் கோரிடோர் (Defence Industrial Corridor) உருவாக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டி.ஐ.சி -ஆனது எம்.எஸ்.எம்.இ -க்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ராணுவம் மற்றும் விமானப் படைகளுக்குத் தேவையான முக்கிய பாதுகாப்பு கருவிகள், உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது. தமிழக அரசு ஒரு சிறப்பு கொள்கையை வெளியிட்டு, அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்குகிறது. மேலும் பாதுகாப்புத் துறை பூங்காக்களில் நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை நிறுவ, நிலங்களை எளிதாக ஒதுக்கீடு செய்ய உதவுகிறது. குறிப்பாக எம்.எஸ்.எ.இ -க்கள் இதில் ஊக்குவிக்கப்படுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications