எம்.எஸ்.எம்.இ -இன் கீழ் வரும் தொழில்கள்! எது எந்த வகையான நிறுவனம்? எப்படி பதிவு செய்வது?
எம்.எஸ்.எம்.இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கீழ் வரும் வணிகங்களை, இந்திய அரசு அவற்றின் முதலீடு மற்றும் வருடாந்திர விற்றுமுதல் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது.
பொதுவாக எம்.எஸ்.எம்.இ -க்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளன.
1. உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் (Manufacturing Enterprises)
2. சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service Enterprises)

உற்பத்தி துறை
உற்பத்தி துறையில் மூலப் பொருட்களை பயன்படுத்தி அல்லது பாகங்களை இணைத்து இறுதியான பொருட்களைப் தயாரிக்கும் நிறுவனங்கள் அடங்கும்.
ஜவுளி மற்றும் ஆடைகள்: ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், துணி உற்பத்தி என பலவும் அடங்கும். குறிப்பாக திருப்பூர் போன்ற நகரங்களில் இருக்கும் பெரிய பெரிய நகரங்களில் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து, சிறு நிறுவனங்கள் ஆர்டர்கள் எடுத்து ஒப்பந்த முறையில் தைத்துக் கொடுத்தல், ஜவுளித் துறை சார்ந்த பிற சிறு வணிகங்கள், அதாவது நூல் உற்பத்தி, சாயம் உற்பத்தி, சாயம் ஏற்றுதல், கோன் உற்பத்தி, எம்ப்ராய்டரி, பேக்கிங் ஒர்க், பிரிண்டிங் என பல சிறு வணிகங்கள் இதில் அடங்கும்.
வாகன உதிரி பாகங்கள்: வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், குறிப்பாக இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், கார்களுக்கு தேவையான பாகங்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், சிறு சிறு அசெம்பிளிங் பணிகள் என பலவும் இப்பிரிவில் அடங்கும்.
உணவு பதப்படுத்துதல்: அன்றாட உணவில் பயன்படுத்தும் மசாலாக்கள் தொடங்கி, ஊறுகாய்கள், பேக்கரி பொருட்கள், உணவு தின்பண்டங்கள், அரிசி ஆலைகள், உடனடியாக சமைத்து உண்ண கூடிய வகையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சம்பந்தமான வணிகம் என பலவும் உணவு பதப்படுத்துதல் பிரிவில் அடங்கும்.
பொறியியல் மற்றும் ஃபேப்ரிகேஷன்: இயந்திர கருவிகள், ஸ்டீல் அலமாரிகள், உலோகப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் பொறியியல் சார்ந்த வெல்டிங் உள்ளிட்ட சிறு பணிகள் இப்பிரிவில் அடங்கும்.
கைவினைப் பொருட்கள்: கைவினைப் பொருட்களை பொறுத்த வரையில் ஏராளமான பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக கைத்தறி, கயிறு சார்ந்த பொருட்கள், அழகிய மண்பாண்டங்கள், துல்லியமான வேலைப்பாடுகளுடன் கூடிய மரச் சாமான்கள், கல் சிற்பங்கள், குழந்தைகளுக்கான பொம்மை தயாரிப்புகள், பனை ஓலைகள் மற்றும் சணல் பொருட்களில் செய்யப்படும் அழகு பொருட்கள், வீட்டுக்கு தேவையான கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என பலவும், இன்றைய பல பெண்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இவற்றில் பலவும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு அடையாளமாகவும் திகழ்கின்றன.
மின்னணு பொருட்கள்: மின்சாதன துறை சார்ந்த உதிரி பாகங்கள், மின்மாற்றிகள் மற்றும் மோட்டார்கள் என பலவும் இப்பிரிவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சேவைத்துறை
உற்பத்தி துறையானது உடல் உழைப்பை அடையாகக் கொண்டது எனில், சேவைத் துறையானது மனிதர்களின் திறனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை: தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்த வரையில் மென்பொருள் உருவாக்கம், டேட்டா பிராசஸிங், சிறு சிறு கால் சென்டர்கள், இணையதளத்தில் வழங்கப்படும் சேவைகள் என பல பணிகள் செய்யப்படுகின்றன.
கல்வி: பல்வேறு சிறு நிறுவனங்கள் கல்வியை தங்களது சாதனமாகக் கொண்டு சிறு வணிகத்தை நடத்தி வருகின்றன. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே பல ஆயிரம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மக்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இதுபோன்ற திறன் மேம்பாட்டு மையங்களை நாடுகின்றனர். இதுவே ஆன்லைன் பயிற்சி மற்றும் ஆன்லைன் கல்வியை மையமாகக் கொண்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு மிக சிறந்த வாய்ப்புகளை கொடுக்கின்றன.
மருத்துவம் & சுகாதாரம்: சிறிய சிறிய அளவிலான மருத்துவமனைகள், கிளினிக்குகள், நோயறிதல் மையங்கள் என பலவும் சேவை பிரிவில் அடங்கும்.
வணிக சேவைகள்: இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய பிரிவாக உள்ளது. நிதி மேலாண்மை, சட்ட ஆலோசனை, கணக்குத் தணிக்கை, முதலீட்டு ஆலோசனைகள், வங்கி சார்ந்த சேவைகள், வணிக ஆலோசனை என பலவும் வணிக சேவைப் பிரிவில் உள்ளன.
விருந்தோம்பல்: சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், ஹோட்டல்கள் அல்லாத சிறிய உணவகங்கள்
பழுதுபார்க்கும் சேவைகள்: வாகன பழுது பார்க்கும் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடைகள், பிளெம்பிங் பணிகள்
வர்த்தக துறை
மேற்கண்ட இரு பெரும் பிரிவுகளைத் தாண்டி உள்ள மற்றொரு முக்கிய பிரிவு வர்த்தக பிரிவு (Trading sector) ஆகும். சரக்குகளை வாங்கி விற்பனை செய்யும் சிறு நிறுவனங்களும் எம்.எஸ்.எம்.இ பிரிவில் சில நன்மைகளை பெறுகின்றன.
சில்லறை வர்த்தகம்: சிறிய மளிகைக் கடைகள், துணிக்கடைகள், மருந்துக் கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.
மொத்த வர்த்தகம்: மொத்தமாக சரக்குகளை வாங்கி, அவற்றை சிறு விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கும் நிறுவனங்கள்
எம்.எஸ்.எம்.இ வகைப்பாடு?
ஒரு நிறுவனம் எம்.எஸ்.எம்.இ -இன் கீழ் வருவதை முடிவு செய்வது, அது எந்த மாதிரியான தொழிலில் ஈடுபடுகிறது என்பதை விட, அதன் முதலீடு மற்றும் வருடாந்திர விற்று முதல் எவ்வளவு என்பதைப் பொறுத்து தான் உள்ளது.
- குறு நிறுவனம் (Micro) - அதிகபட்ச முதலீடு ரூ.1 கோடி வரை - வருடாந்திர விற்று முதல் ரூ.5 கோடி வரை
- சிறு நிறுவனம் (Small) - அதிகபட்ச முதலீடு ரூ.10 கோடி வரை - வருடாந்திர விற்று முதல் ரூ.50 கோடி வரை
- நடுத்தர நிறுவனம் (Medium) - அதிகபட்ச முதலீடு ரூ.50 கோடி வரை - வருடாந்திர விற்று முதல் ரூ.250 கோடி வரை
நீங்கள் செய்யும் வணிகம் மேற்கண்ட முதலீடு மற்றும் விற்றுமுதல் வரம்புக்குள் இருந்தால், அது எந்த பிரிவை சார்ந்தது உள்ளிட்ட சரியான விவரங்களை கொடுத்து உதயம் (Udayam Registration) பதிவு செய்து கொள்ளலாம். அதன் மூலம் எம்.எஸ்.எம்.இ -க்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். புதிதாக தொடங்கும் வணிகத்திற்கும் இதே செயல்முறை தான். உதயம் பதிவை எளிதாக அதன் அதிகாரப்பூர்வ தளத்திலேயே (https://www.udyamregistration.gov.in/Government-India/Ministry-MSME-registration.htm) பதிவு செய்து கொள்ளலாம்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications