Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mullaperiyar Dam Water Level Today | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று

Subscribe to Oneindia Tamil

Sep 13, 2024, 11:08 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாக (அனுமதிக்கப்படும் அளவு 142 அடி) 945 கன அடி நீர் வரத்தும், 800 கன அடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
Sep 11, 2024, 10:13 am IST

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 670 கன அடியாக சரிந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.5 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 50.48 டி.எம்.சி.யாக உள்ளது.
Sep 03, 2024, 11:01 am IST

இன்று (செவ்வாய்க்கிழமை) அணைக்கான நீர்வரத்து 772 கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 131 அடியாக உள்ளது. விநாடிக்கு 400 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 29, 2024, 11:26 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக (அனுமதிக்கப்படும் அளவு 142 அடி) நீர்வரத்து 405 கன அடியாகவும், நீர்வரத்து 405 கன அடியாகவும் இருந்தது.
Aug 28, 2024, 1:21 pm IST

முல்லைப் பெரியாறு அணை:- நீர்மட்டம் - 129.85 அடி (152), நீர் இருப்பு - 4665 டிஎம்சி, நீர்வரத்து - 405 கன அடி, நீர் வெளியேற்றம் - 400 கன அடி
Aug 23, 2024, 11:09 am IST

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 603 கனஅடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.6 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 105 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 21, 2024, 10:33 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.95 அடியாக (அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு 142 அடி) நீர்வரத்து 1229 கனஅடி மற்றும் வெளியேற்றம் 105 கனஅடி.
Aug 19, 2024, 10:17 am IST

இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.9 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 4460 மில்லியன் கனாடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்காக 1511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Aug 14, 2024, 10:35 am IST

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.65 கன அடியாக உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து 1035 கன அடியாக உள்ளது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1533 கன அடியாகவும், அணையின் இருப்பு 4622 கன அடியாகவும் இருக்கிறது.
Aug 13, 2024, 2:59 pm IST

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 129.85 அடியாகவும், நீர்வரத்துவிநாடிக்கு 908 கன அடியாகவும் இருந்தது.
Aug 12, 2024, 11:43 am IST

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் 58.53 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Aug 12, 2024, 11:43 am IST

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் 58.53 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Aug 12, 2024, 11:20 am IST

இன்று காலை நிலவரப்படி அணையின் 130 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 847 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 4697 மில்லியன் கனஅடி.
Aug 09, 2024, 10:13 am IST

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது தென்மேற்குப் பருவமழை வலுவடைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 28-ம் தேதி 128 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று (வெள்ளி) 131.20 அடியை எட்டியுள்ளது.
Aug 08, 2024, 10:23 am IST

இன்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலவரப்படி முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 865 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும் அணையிலிருந்து தற்போது 1400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று 131.2 அடியாக உள்ளது.
Aug 07, 2024, 10:49 am IST

இன்றைய நிலவரப்படி (ஆகஸ்ட் 07) முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 1005 கன அடியாக உள்ளது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1400 கன அடியாகவும், தற்போது அணையின் நீர்மட்டம் 131.4 அடியாக இருந்து வருகிறது.
Aug 06, 2024, 6:29 pm IST

இன்றைய நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1006 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 05, 2024, 10:37 am IST

இன்றைய நிலவரப்படி, பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அதேசமயம் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1260 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
Aug 01, 2024, 12:16 pm IST

இன்றைய நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக இருந்தது, நீர்வரத்து 3265 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1355 கன அடியாக உள்ளது.
Jul 31, 2024, 2:23 pm IST

நேற்றைய நிலவரப்படி (ஜூலை 30) அணைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 3616 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1341 கன அடியாகவும், அணையின் இருப்பு 4460 மில்லி கன அடியாகவும் இருந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக இருந்து வருகிறது.
Jul 03, 2024, 12:13 pm IST

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அதன்பின் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் 123.7 அடி எட்டியுள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவையும் நீர்வளத் துறையினர் வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது.
May 30, 2024, 10:21 am IST

நேற்றைய நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து 44 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2439 மி.கன அடி.
May 22, 2024, 2:35 pm IST

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
May 04, 2024, 11:17 am IST

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115.05 கன அடியாவும், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு 105 கனஅடியாகவும், நீர் இருப்பு 1,736 மில்லியன் கனஅடியாக உள்ளது.
Apr 29, 2024, 10:39 am IST

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 115.15 அடியை எட்டியுள்ளது.
Mar 21, 2024, 9:45 am IST

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.30 அடியாக இருந்தது, நீர்வரத்து பூஜ்ஜியமாகவும், அணையில் இருந்து 105 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
Mar 12, 2024, 10:49 am IST

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
Mar 11, 2024, 11:35 am IST

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 121 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2826 மில்லியன் கன அடியாகும்.
Jul 16, 2022, 10:27 am IST

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.20 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 143 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,789 கன அடியாகவும் இருந்தது.
Nov 30, 2021, 11:43 am IST

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 142 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2,710 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாக இருந்தது.

முல்லைப் பெரியாறு அணை வரலாறு

முல்லைப் பெரியாறு அணைக்கான கட்டுமானப் பணி 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் ஆங்கிலேய இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது?

முல்லைப் பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அணை தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையைப் பராமரித்து வருகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது முல்லைப் பெரியாறு அணை?

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாய்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது.

முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவு விவரம்

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் முழுக்கொள்ளளவும் நீர் தேக்கினால் ஆபத்து என்று கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 டி.எம்.சி ஆகும். அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும்.

முல்லைப் பெரியாறு வானிலை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதால் எப்போதும் குளிர்ச்சியான காற்றும் இதமான சூழலும் நிலவி வருகிறது.

முல்லைப் பெரியாறு - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவி, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில், வைகை அணை, பென்னிகுவிக் மணிமண்டபம் ஆகியவை சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும். கேரளாவில் அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, இரவிகுளம் தேசியப் பூங்கா, இராமக்கல் மெட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. தேக்கடியை ஒட்டி குமுளி பகுதியும் காண தகுந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு மலையில் இருந்து பெறப்படும் வாசனை பொருட்கள் அதிகளவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

முல்லைப் பெரியாறு - பார்வையிடும் நேரம்

முல்லைப் பெரியாறு அணையை அனைத்து நாட்களிலும் காலை 6 அணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். ஆனால் காலை 7 மணி முதல் மாலை 3 வரை அணைப்பகுதியை பார்வையிடுவதுதான் சிறந்தது என கூறப்படுகிறது. இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Mullaperiyar Dam Water Level Today
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+