அந்தமானையும் விட்டு வைக்காத கொரோனா.. புதிதாக 11 பேருக்கு பாதிப்பு.. 100 நாட்களாக உயிரிழப்பில்லை!

Subscribe to Oneindia Tamil

போர்ட்பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 100 நாட்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11 new cases of corona have been confirmed in the Andaman and Nicobar Islands

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

அங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அந்தமானில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா மொத்த பாதிப்பு 5,201 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர். 89 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,050 பேர் மொத்தம் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3.39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்ட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 100 நாட்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+