நீயெல்லாம் ரிப்போர்ட்டரா? நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த தூத்துக்குடி ஏடிஎஸ்பி! தூத்துக்குடி பரபர!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 14 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை நாக்கை துருத்தி தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி. ஒருமையில் பேசியது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவதூறாக என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பேசிய அவர்,"மானங்கெட்ட முதலமைச்சரே, எங்களை கோமாளிகள் என்றா நினைத்து கொண்டிருக்கிறாய்? சட்டமன்றத்தை கூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து தான் உன்னை அனுப்புவோம்" எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல்நிலையத்தில் தவெகவினர் புகார் அளித்தனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 351(3), 352, 353(2) BNS என்ற மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேற்று காலை கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயிலுக்கு போன திமுக MLA..சிஎம் விஜய்யை மிரட்டும் வகையில் பேச்சு! 15 நாள் ரிமாண்டில் மார்க்கண்டேயன்!
காலை 7:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கூட்டி வந்த நிலையில், மாலை 6:30 மணிக்கு தான் விசாரணை முடிவு பெற்றது. சுமார் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்து உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முன்வாசல் வழியாக வராமல் தூத்துக்குடி மார்க்கண்டேயனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறமாக உள்ளே அழைத்துச் சென்றனர் போலீசார்.
அவர் உள்ளே செல்லும் பொழுது என்னை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை கொண்டு சென்று என்னை என்னை கொல்லப் பார்ப்பதாகவும் சொல்லிக்கொண்டே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர் போலீசார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றனர். அப்போடுஹ் தூத்துக்குடி ஏடிஎஸ்பி திபு பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி நாக்கை துருத்தி," நீங்கள் பத்திரிகையாளர்களா? ரவுடியா? என ஒருமையில் பேசியதோடு, அவர்களை பத்திரிகையாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுழு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
