ஜெயிலுக்கு போன திமுக MLA..சிஎம் விஜய்யை மிரட்டும் வகையில் பேச்சு! 15 நாள் ரிமாண்டில் மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 14 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவதூறாக என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் தாள முத்துநகர் வக்கீல் விஜி SP அலுவலகத்தில் புதூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I ,குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது, U/S 351(3), 352,353(2) BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு இன்று காலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து, விசாரணைக்காக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்..
தொடர்ந்து காவல்துறையினரின் சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பின் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பின் தூத்துக்குடி ஜேஎம் கோர்ட் 1ல் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுமதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசு தரப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்சாண்டர், பாபு செல்வன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டு வழக்கை விசாரணை செய்த மஜிஸ்திரேட் சுமதி தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 14 நாள் அதாவது ஆகஸ்ட் 3 ந் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அவரை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications
