மார்க்கண்டேயனை தூக்கி உள்ளே போடுங்க.. சூப்பர் சிஎம் சார்! திடீரென சப்போர்ட்டுக்கு வந்த பாஜக! யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மார்க்கண்டேயனை கைது செய்தது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Markandeyan

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் தூத்துக்குடி த.வெmக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் போலீசார் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

மார்க்கண்டேயன் கைது

தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேஜிஸ்ட்ரேட் சுமதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு அரசு வழக்கறிஞர் கண்ணன், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு வழக்கறிஞர்கள் அலெக்சாண்டர், பாபு செல்வன் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்டு வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்திரேட் சுமதி தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனனை கைது செய்து 15 நாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற காவல்

இந்நிலையில், மார்க்கண்டேயனை கைது செய்தது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்," "மானங்கெட்ட முதலமைச்சரே, எங்களை கோமாளிகள் என்றா நினைத்து கொண்டிருக்கிறாய்? சட்டமன்றத்தை கூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து தான் உன்னை அனுப்புவோம்" என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்தது வரவேற்கத்தக்கது.

நாராயணன் திருப்பதி

இந்த கைதை கண்டித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது கேவலத்தின் உச்சக்கட்டம். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் தகாத வார்த்தைகளை பேசி முதலமைச்சரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தன் கட்சியின் உறுப்பினர்களை நாகரீகமாக, கண்ணியமாக, மரியாதையாக நடந்து கொள்ளச் செய்வது தான் தலைமையின் கடமை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் வசனம் பேசியவர்கள், பிரதமரை, முதலமைச்சரை கேவலமாக பேசுவதை ஊக்குவிப்பது அக்கட்சியின் அழிவை உறுதி செய்கிறது.

திமுக ஆட்சி

இப்படி வெட்கம் கெட்டு பேசுவது திமுகவின் உடன்பிறந்தது என்று உலகிற்கு தெரிந்தாலும், தங்களை கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில், திமிரில் சகட்டு மேனிக்கு யாரையும் விமர்சிக்கலாம் என்று இதுகாறும் நினைத்திருந்தவர்களுக்கு இது போன்ற கைதுகள் பாடம் புகட்டட்டும். கடந்த திமுக ஆட்சி நடைபெற்ற போது, அன்றைய திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும், தரக்குறைவாக பேசியது குறித்து பல்வேறு புகார்களை பாஜக அளித்திருந்தது.

தமிழக காவல்துறை

இந்த நிலையில், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் உத்தரவிடுவதோடு, மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+