பிகாரில் ஆட்சி அமைக்க ராப்ரி, நதீஷ் போட்டி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகால் ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என்று ஆளுநிடம் பீகார் ராஷ்ட்ய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவரும்,முன்னாள் தல்வருமான ராப்ரி தேவியும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பேரவைக் கட்சித் தலைவர் நதீஷ் குமாரும் கோக்கை விடுத்துள்ளனர்.

புதன்கிழமை மாலை நதீ ஷ் குமாரும், ஜார்கன்ட் க்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரன் இருவரும் ஆளுநிர் வினோத் சந்த் பாண்டேவைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியைமைக்க அழைப்பு விடுக்குமாறு மனு கொடுத்தன. இத்துடன் தனது கூட்டணிக்கு ஆதரவு தரும் ஜார்கன்ட் க்தி மோர்ச்சா உறுப்பினர்கள் 12 பேன் பட்டியலையும் ஆளுநிடம் கொடுத்தனர்.

ஜார்கன்ட் ஆதரவையும் சேர்த்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 134 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சொந்த பலம் 122. பெரும்பான்மைக்கு இன்னும் 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. பெரும்பான்மைக்கான பலம் 163.

ராப்யும் கோக்கை:

இதே போல, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு இப்போதைய தல்வர் ராப்ரி தேவியும் ஆளுநிடம் மனு கொடுத்துள்ளார்.

தற்போதுள்ள பீகார் சட்டப்பேரவையை கலைத்துவிடும்படி ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ய ஜனதா தளக் குழுவினர் புதன்கிழமை காலை ஆளுநிர் வினோத் சந்த் பாண்டேயிடம் மனுக் கொடுத்தனர். தற்போதைய பேரவையின் ஆட்சிக்காலம் ஏப்ரல் 9-ம் தேதியுடன் டிவடைகிறது. பேரவையைக் கலைத்துவிடும்படி மனுக் கொடுத்தபோது, தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநிடம் ராப்ரி தேவி கேட்டுக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெவித்தன. ராப்ரி தேவியின் மனுவை ஏற்றுக் கொண்ட ஆளுநிர், சட்டப்பேரவையைக் கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

இதற்கிடையே, பீகால் லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ய ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது தொடர்பாக பிகார் மாநல காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கூடி ஆலோசனை நிடத்தினர்.

பீகார் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நிடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நிேரத்தில் மற்ற எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிட்டவில்லை. 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக லல்லுவின் ராஷ்ட்ய ஜனதா தளம் கட்சி விளங்குகிறது.

ராப்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு:

இதற்கிடையே, ராஷ்ட்ய ஜனதாதளத்திற்கு ஆதரவு தர பகுஜன் சமாஜ் கட்சி டிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் கான்ஷிரம் இந்த டிவை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெவித்தார்.

அவர் கூறுகையில், லல்லு பிரசாத் யாதவிடம் தொலைபேசியில் பேசினேன். ராஷ்ட்ய ஜனதாதளத்திற்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தேன். தலித் மக்களின் நிலன்களை ராப்ரி தேவி அரசு பாதுகாக்க வேண்டும் என்று லல்லுவைக் கேட்டுக் கொண்டேன். எனது நபந்தனையை லல்லு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து ஆதரவைத் தெவித்தேன்.

சோனியா ஆலோசனை:

இந் நலையில், 23 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி, பிகார் அடுத்து யார் ஆட்சி அமைக்கவேண்டும் என்பதை நர்ணயிக்கும் நலையில் உள்ளது. அக் கட்சி தரும் ஆதரவைப் பொருத்துத்தான் லல்லு ஆட்சி அமைப்பாரா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது உறுதியாகும்.

இந் நலையில், லல்லுவுக்கு ஆதரவு தருவது குறித்து மாநல காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் (பொறுப்பு) மோஷினா கித்வாய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நிடைபெற்றது. இக் கூட்டத்தில் உறுதியான டிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே லல்லு பிரசாத் யாதவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், த்த காங்கிரஸ் தலைவர்களையும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

பீகால் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நிடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.

ஆட்சி அமைக்க உமை கோரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ராஷ்ட்ய ஜனதா தளக் கூட்டணி இரண்டும் பெருபான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராகும் வரையில் காத்திருக்கப் போவதாக பிகார் ஆளுநிர் வினோத் சந்த் பாண்டே தெவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+