வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லியிலிருந்து டாக்கா சென்றார் கிளிண்டன்
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன், ஐந்து நிாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.35க்கு டெல்லி வந்து சேர்ந்தார்.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நலையத்தில் கிளிண்டன் வந்த "ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் வந்து இறங்கியது. விமானத்திலிருந்து, மகள் செல்சியாவுடன், கிளிண்டன், புன்னகை பூத்தவாறு, கைகளை அசைத்தவாறு இறங்கினார்.
கிளிண்டனை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா ஆகியோர் வரவேற்றனர். கிளிண்டனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நலையத்திலிருந்து நிேராக ஹோட்டர் மெளயா ஷெரட்டனுக்கு கிளிண்டன் சென்றார். கிளிண்டனுடன், மகள் செல்சியா, மாமியார் டோரத்தி ரோதம் ஆகியோரும் வந்தனர்.
டாக்கா சென்றார்
டெல்லியிலிருந்து, திங்கள்கிழமை காலை கிளிண்டன், வங்கதேச தலைநிகர் டாக்கா சென்றார். அதிகாலையில் அவர் சிறப்பு விமானத்தில் சென்றதாக அமெக்க தூதரக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெவித்தார்.அங்கு ஒரு நிாள் பயணத்தை டித்துக் கொண்டு இரவு மீண்டும் டெல்லி வருகிறார்.
ஹோலி நகழ்ச்சியில் செல்சியா
ராஜஸ்தான் மாநலம் ஜோத்பூல் நிடக்கும் ஹோலி நகழ்ச்சியில் கிளிண்டனின் மகள் செல்சியா கலந்து கொள்கிறார். ஜோத்பூர் மகாராஜா கஜ் சிங்கின் குடும்பத்தினருடன் அவர் ஹோலி கொண்டாடுகிறார். செல்சியாவுடன், பாட்டி டோரத்தி ரோதம் உடன் செல்கிறார்.
இவர்களுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், அமெக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட் ஆகியோரும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications