வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லியில் மகள், மாமியாருடன் சால்வை வாங்கினார் கிளிண்டன்
டெல்லி:
அமெக்க அதிபர் பில் கிளிண்டன் தனது மகள் செல்சியா மற்றும் அவரது மாமியார் டோரத்தி ரோதம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி வந்து சேர்ந்ததும், தல் வேலையாக ஒரு கடைக்குச் சென்று சால்வைகள், பட்டு கார்பெட்டுகள் ஆகியவற்றை வாங்கினர்.
15 மணி நிேர விமான பயணத்திற்குப் பிறகும் அவர்கள் களைப்படையாமல் கடைக்கு வந்து தங்களுக்குப் பிடித்தமான சால்வைகள், பட்டு கார்பெட்டுகள் ஆகியவற்றை வாங்கினர். 1995-ம் ஆண்டு தனது அம்மா ஹில்லா கிளிண்டன் சென்று வாங்கிய அதே கடையில் செல்சியாவும் பொருட்களை வாங்கினார்.
கடையை நர்வகிக்கும் நிான்கு சகோதரர்களில் ஒருவரான மன்சூர் வாங்னூ கூறுகையில் இரவு 10.30 வரை கிளிண்டன் குடும்பத்தினர் கடையில் இருந்தனர். சுமார் 40 நமிஷங்கள் அவர்கள் கடையில் செலவழித்தனர். கடையில் இருக்கும் போது, வாசம் மிகுந்த காஷ்மீர் டீ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கைவேலைப்பாடுகள் நறைந்த உல்லன் ஜாக்கெட்டுகள், பஷ்மினா சால்வைகள் ஆகியவற்றை கிளிண்டனின் மாமியார் அதிக அளவில் வாங்கினார். மேலும், அமெக்க கொடி பொறிக்கப்பட்ட ஒரு உல்லன் ஜாக்கெட்டுக்கு அவர் ஆர்டர் கொடுத்துள்ளார். இரண்டு மாதம் கழித்து அது அமெக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications