வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீரில் சீக்கியர்களை கொன்ற 6 தீவிரவாதிகள் உள்பட 12 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடந்த சம்பவங்களில் ஏழு தீவிரவாதிகள உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 6 பேர் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த சீக்கியர்கள் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள்.
காஷ்மீரில் சிட்டிசிங்புரா பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாய் தீவிரவாதக்கும்பலினால் கண்மூடித்தனமாய் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் தீவிரவாதிகள் காஷ்மீரில் எந்தப் பகுதியில் இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்து சுட்டுக்கொன்று வருகின்றனர். புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு தீவிரவாதக் கும்பல் ஒன்று காஷ்மீரில் அனந்தநாக் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனந்தநாக்கை அடுத்துள்ள ஹாலன் கோகர்நாக் என்ற இடத்தில் நடமாடிக்கொண்டிருந்த போது பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் சீக்கியர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள்.
இப்பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை அதிகாலை விரைந்தனர். குறிப்பிட்ட ஒரு வீட்டை முற்றுகையிட்ட பாதுகாப்புப் படையினர் தானியங்கித் துப்பாகிகளால் சரமாரியாகச் சுட்டனர். தீவிரவாதிகளும் திருப்பிச் சுட்டனர். இதில் 7 தீவிரவாதிகள் இறந்தனர்.
அப்பகுதியில் இன்னும் சண்டை நடந்து வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இறந்த ஐந்து தீவிரவாதிகளும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் சாவு
இதற்கிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள குவாஸிகந்த் பகுதியில் 5 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்தது.
ஜம்முவில் கடந்த வாரம் தான் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய சீர்திருத்த அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் யார் என்ற அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
திடீரென்று அங்கு தோன்றிய தீவிரவாதிகள் சாலையோரம் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை கண்மூடித்தனமாய் சுட்டுக்கொன்று விட்டு இருட்டுக்குள் ஓடி தப்பித்து விட்டனர். அவர்கள் யாரென்ற அடையாளம் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தில் இறந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அசாமில் 2 உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:
அசாம்-நாகலாந்து எல்லைப் பகுதியில் போலீசாரைக் கண்டதும் தப்பித்து ஓட முயன்ற 2 தீவிரவாதிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
யு.என்.ஐ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications