வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு: நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரைக்கு மூப்பனார் வரவேற்பு
சென்னை:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அப் பிரிவினருக்கான நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளதை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் யாரும் இல்லை. அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகள் பணியாற்ற வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள உர் நீதிமன்றங்களில் பணிபுரியும் 481 நீதிபதிகளில் 15 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பையும், 5 பேர் பழங்குடியினர் வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம், நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கமுடியாத வகையில் உள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தம் செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே மேற்கொள்ளவேண்டும். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications