வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் லீக் ஆகவில்லை என்று கருணாநிதி பொய் சொல்லிவிட்டார் - திண்டிவனம் ராமமூர்த்தி குற்றச்சாட்டு
சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட் லீக் ஆகவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி பொய் சொல்லிவிட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
சர்க்கஸ் கோமாளி ஒருவர் ஒரு கிழந்த பேப்பரை கையில் வைத்துக் கொண்டு பட்ஜெட் லீக் ஆகிவிட்டது என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரில் கூறியுள்ளார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்தார். இது உரிமை மீறல் செயலாகும்.
பட்ஜெட் லீக் ஆகியது தொடர்பான புகார் மனு சென்னை மாநகராட்சி ஆணையரிடம் உள்ளது. ஆனால், பட்ஜெட் லீக் ஆகவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி பொய் சொல்லிவிட்டார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் கருணாநிதி தோல்வியடைந்துவிட்டார். எந்த சம்பவங்கள் நடைபெறக்கூடாது அவையெல்லாம் திமுக அரசில் நடைபெறுகின்றன.
சென்னைக்குக் கிருஷ்ணா நீர் வராததற்கு, ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர்தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தவறு.
தமிழ்நாடு உள்பட 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரஸில் சேருவாரா என்பது குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது.
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை ஏப்ரல் 10-ம் தேதி வரை தொடரும் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications