வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜாவில் கோக-கோலா கோப்பை ஒருநாள் கிரிக்கெட் - இன்று இறுதிப் போட்டி -பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா மோதல்
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்கான ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டித் தொடரின் இறதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
கடந்த வாரம் துவங்கிய இப் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல கடைசி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா வழக்கம் போல மற்ற போட்டித் தொடர்களைப் போலவே தகுதிச் சுற்றுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி சுற்றுப் போட்டியில் மட்டும் தென் ஆப்பிரிக்கா தோற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணி அடைந்த முதல் தோல்வி இதுதான்.
இப் போட்டித் தொடரில் மூன்றாவது அணியாகக் கலந்து கொண்ட இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை இறுதிக் கட்ட ஆட்டங்களில் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. தகுதிச் சுற்றுகளில் சுலமாக வெற்றிபெறும் இந்த அணி இறுதிப் போட்டியிலோ அல்லது அதற்கு முந்தைய முக்கிய ஆட்டங்களிலோ தோல்வி அடைவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கோக-கோலா கோப்பையிலும், முதல் மூன்று ஆட்டங்களில் வென்ற அந்த அணி, கடைசி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தது.
தற்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ளவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்ஸி குரோனியே. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து கோக-கோலா கோப்பையை வெல்லும் முடிவில் உள்ளார்.
மோயின்கான் தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டித் தொடரிலேயே அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். அவரும் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவார்.
ஷார்ஜாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்குத் தான் அதிக வெற்றி உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த கோக-கோலா கோப்பையிலும் அந்த அணியே கோப்பையை வெல்லும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications