வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராகிங் செய்பவர்களுக்கு 3 வருட கடுங்காவல் ரூ 25 ஆயிரம் அபராதம்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி:
ராகிங் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு 3 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ராகிங் செய்வதைத் தடுக்கும் வகைகயில் பல்கலைக்கழக மானியக் கமிஷன் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்திற்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து ராகிங் செய்யும் மாணவர்கள் அல்லது மாணவியர்களுக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ மாணவியர் ராகிங் கொடுமைக்கு அதிக அளவில் பலியாகி வருகிறார்கள். அண்மையில் சிதம்பரம் மருத்துவப் பல்கலைக் கழக மாணவர் நாவரசு ராகிங் கொடுமையால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்களும் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகளை தடுத்து நிறுத்தும்படி பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு சிபாரிசு செய்தனர்.
இதைப் பரிசீலித்த பல்கலைக் கழக மானியக்குழுவினர் இப்பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு மனுக்கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தினர் ராகிங் செய்யும் கல்லூரி மாணவ மாணவியரை உடனடியாக அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும் விதிக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்தந்தக் கல்லூரிகளே இந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்
இவ்வாறு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications