வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விடும் செயலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் விடுத்த பேச்சுவார்த்தைக்கானஅழைப்பையும் இந்தியா நிராகரித்து விட்டது.
டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரமீந்தர் சிங் ஜஸ்ஸால் இதுகுறித்துக் கூறியதாவது:
எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிரான வன்முறைப் போக்கையும் பாகிஸ்தான் கைவிட வேண்டும். அப்படிச் செய்யாதவரை அந்நாட்டுடன் நடக்கும் எந்தப் பேச்சுவார்த்தையும் அர்த்தமானதாக இருக்காது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இனாமுல் ஹக் வேண்டுகோளின் பேரில், இஸ்லாமாபாதில், அவருக்கும், இந்திய தூதர் பார்த்தசாரதிக்கும் இடையே பேச்சு நடந்தது. கூட்டத்தில், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க ஆர்வமுடன் உள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செயல்படுவதாகவும் ஹக் கூறினார்.
பாகிஸ்தானுடன் ஒற்றுமையாகவும், அதிையுடனும் செயல்படவே இந்தியா எப்போதும் விரும்பி வந்துள்ளது. டெல்லியின் விருப்பத்தின் பேரில் 1998-ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பிரதமர் வாஜ்பாய் பஸ் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் குறித்து இந்தியா கொண்டுள்ள நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டத் தாண்ட கார்கில் பகுதியில் பாகிஸ்தான் முயன்றது விதி மீறல் மட்டுமல்லாது, நம்பிகைத் துரோகமும் ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக எந்த எண்ணத்தையும், திட்டத்தையும் இந்தியா கொண்டிருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதிக்கு பங்கம் விளைவக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் இந்தியா ஆதரிக்காது. இதை பலமுறை பிரதமர் வாஜ்பாய் சுட்டிக் காட்டியுள்ளார்.
சீண்டினால் சரியான பதிலடி கிடைக்கும்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பாகிஸ்தான் வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களைத் தூண்டி விட்டு வருகிறது. இருப்பினும் இந்தியா மிகவும் கட்டுப்பாட்டுடன் பொறுமை காத்து வருகிறது. தொடர்ந்து தனது வேலையை பாகிஸ்தான் செய்து வந்தால் அதற்குச் சரியான பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது. கடந்த கால அனுபவங்களை பாகிஸ்தான் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications