Aadi Matha Rasi Palan: ராஜா பகவத் மாதிரி இருக்கா.. மேஷ ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்
ஆடி மாத ராசிபலன்: தமிழ் மாதத்தில் முக்கியமான ஆடி மாதம் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கு பின்னாலும் ஓர் அறிவியல் உள்ளது. இந்த ஆடி மாதத்தில் பல கிரக நிலைகளில் சில அதிசயங்கள் நிலவுகின்றன. இதன் மூலம் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
ஆடி மாதம் ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் வரை இருக்கும். 12 வருடங்களுக்கு பிறகு சிவராஜயோகத்துடன் ஆடி மாதம் பிறக்கிறது. சூரியனும், குரு பகவானும் வீட்டில் இணைந்து உச்ச பலத்துடன் இருப்பதுதான் சிவராஜயோகம். இந்த மாதத்தில் சூரியன், புதன் குரு கடக ராசியில் பயணிக்கவுள்ளனர். சுக்கிரன் கன்னி வீட்டில் பயணிக்க போகிறார். செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்துள்ளார். புதன் பகவான் வக்கிரமாக உள்ளார். ராகு, கேதுவின் தாக்கம் இந்த மாதம் இருக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளிட்ட நல்ல பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் மேஷ ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்திற்கு ஆடி மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்காக பயன்படுத்தி கொள்ள போகிறார்கள். ஞானம் அதிகரிக்கும். 9,5,15 இடங்கள் 10,11 இடங்களை பார்க்கிறார்கள். செவ்வாய் பகவான் சுக்கிரன் வீட்டில் இருந்து ராசியை பார்க்கிறார்கள். கடன்சுமை குறையும். கடல் கடந்து ராஜயோகம் ஏற்படும். வெளிமாநில, வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். விமானத்தில் பயணிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
உத்யோகம் ஏற்றம்
வெளிநாடுகளில் செட்டில் ஆவதற்கான யோகம் உள்ளது. பிரிந்த கணவன் மனைவிகள் இணைவார்கள். வெளிநாடுகளில் இருப்போர், தங்கள் வாழ்க்கை துணையுடன் இணைவார்கள். புதிய வேலை வாய்ப்பு, வேலையில் மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். கேது சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பலர் புதிய தொழில் தொடங்குவார்கள். உத்யோகத்தில் ஏற்றம் உண்டு.
செல்வாக்கு உயரும்
ஆளுமைத்திறன் வெளிப்படும். தலைமை பொறுப்புகள் கிடைக்கும். ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது போல உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றி மேல் வெற்றி குவியும். பயணங்கள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கவனம்
31 ஆம் தேதி வரை புதன் வக்கிரமாக இருப்பதால் எல்லாவற்றிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் அமர்கிறார். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய கடன் வாங்க வேண்டாம். கல்வியில் அறிவு அதிகரிக்கும். விரயத்தில் சனி பகவான் இருப்பதால் அவ்வபோது கல்வியில் சற்று கவனம் சிதறும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும்.
பரிகாரம்
பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை, செயலலில் நிதானமாக இருக்க வேண்டும். கோபம், பதற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்களை பற்றி புரளி பேசுவார் குறித்து கண்டுகொள்ளாமல் கடந்து சொல்லுங்கள். ஒவ்வாமை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. துர்க்கை, அம்பிகை, சக்தி, காளி வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications