முகத்தில் தெளித்த சாரல்...
டைரக்டர் விக்ரமனின் வானத்த போல படத்தில் முதலில் ஷில்பா ஷெட்டி நடிக்க இருந்ததாகச் செய்திகள்வந்தது குறித்து...?
யெஸ். ஹோம்லியான ஹீரோயினான நான் அல்ட்ரா மாடர்ன் டிரெஸ்சில் சிட்டியிலிருந்து கிராமத்துக்கு வரமாதிரிஒரு சீன். அப்போது டைரக்டர் விக்ரமனுக்கு நான் மாடர்ன் டிரெஸ்சில் எப்படித் தோன்றுவேனோ, அது எனக்குநல்லாயிருக்குமோ என்ற பயம் கலந்த சந்தேகம் இருந்தது.
அப்புறம் முதல் ஷாட் எடுத்தவுடன் அவருக்கு நம்பிக்கை வந்தது. அவரும் ஓ.கே. சொல்லி விட்டார்.
தமிழில் உங்களுடைய லேட்டஸ்ட் படங்கள்?
பாரதிகண்ணம்மா, பொற்காலம் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்த டைரக்டர் சேரனின் வெற்றிக் கொடி கட்டுபடத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர். என்னிடமிருந்து மிகச்சிறந்தநடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் சேரன். அதுக்கு அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.
அடுத்தது, நடிகர் சரத்குமாருடன் மாயி. அந்தப் படத்தில் க்ளைமாக்ஸ் சீனில் நான் ரொம்ப சேலஞ்ச் எடுத்துப்பண்ணினேன். அர்ஜூனுடன் ரிதம், சரத்குமாருடன் ஸ்ரீராமஜெயம் படத்தில் நடிக்கிறேன். மேலும்பிரவுதேவாவுடன் டபுள்ஸ் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். இவை தவிர ஒரு மலையாளப் படம்,இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறேன்.
தமிழ் புத்தாண்டன்று எனது வெற்றிக்கொடிகட்டு மற்றும் மாயி தமிழ்திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.அந்தப்படங்களில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
நீங்கள் இதுவரை நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம்...?
முத்து, எஜமான், சீதாராமகல்யாணம், ஆகியவை. அந்தப் படங்கள்ல நடிக்கும்போது நான் ரொம்ப என்ஜாய்பண்ணி நடித்தேன். படங்களும் ரெக்கார்டு பிரேக் ஆன படங்கள்.
அப்புறம் தெலுங்கில் நான் பஞ்சாராம் படத்தில் எனக்கு ரொம்ப ஹெவியான கேரக்டர். ரொம்பச்சின்னப்பெண்ணான நான் 60 வயது மனைவியை இழந்த முதியவரை மணந்து கொள்ளும்படியான கேரக்டர்.மேலும் அவர் என்னை டார்ச்சர் பண்ற மாதிரியான பல சீன்கள் படத்தில் வரும். அந்தப் படத்திற்காக நான் என்கேரக்டரை உணர்ந்து உயிரைக்கொடுத்துப் பண்ணினேன்
திரையுலகில் நீங்கள் கற்றுக்கொண்டது...?
நான் எப்போதுமே டைரக்டர் எரிச்சலடையும் விதத்தில் நடந்து கொண்டது கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில்சாப்பாடு விஷயத்திலும் நான் எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லை.
சினிமாவில் உங்களது குறிக்கோள்...?
கண்ணைக்குத்தாத அளவுக்கு கிளாமர், மற்றும் குடும்பப்பாங்கான தோற்றத்தில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.அவ்வை சண்முகி, எஜமான், நாட்டாமை படங்கள் போல் சிறப்பான கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கவிரும்புகிறேன். கிளாமரே எனக்கு வேண்டாம்.
அப்படியென்றால் நீங்கள் கிளாமர் நடிப்பில் கவனம் செலுத்துவதில்லையா?
கிளாமரா நோ... நோ... என்று அவசரமாக மறுத்தார் நடிகை மீனா. கிளாமராக நடிப்பதற்கென்று தனியாகநடிகைகள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது நான் எதற்காக கிளாமர் பக்கம் போக வேண்டும்? எதற்காகஎனக்குள்ள இமேஜைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? நான் கிளாமர் பக்கம் போய் எனது ரசிகர்களை இழக்கவிரும்பவில்லை என்கிறார் மீனா.












Click it and Unblock the Notifications