தமிழகத்தில் இன்று
மூன்றாவது அணி: மே 4-ல் முக்கிய முடிவு
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவுடன், நான்கு முன்னாள் முதல்வர்கள் மே 4-ம் தேதி கல்கத்தாவில் சந்தித்துப் பேசுகின்றனர். இந்த சமயத்தில்மூன்றாவது அணி அமைப்பதற்கான முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக வலுத்துவருகிறது. இதுதொடர்பாக பல்வேறு ஊகங்கள் கூறப்பட்டாலும் இதுவரை எந்த தெளிவான முடிவும் காணப்படவில்லை.
இந்த நிலையில் நான்கு முன்னாள் பிரதமர்களான வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை கல்கத்தாவிற்கு வருமாறுஜோதிபாசு அழைத்துள்ளார். மாற்று கூட்டணி உருவாக்குவது தொடர்பாக விவாதிக்க இவர்களை ஜோதிபாசு அழைத்துள்ளார். அன்று இரவுவிருந்திற்கும் ஜோதிபாசு ஏற்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோதிபாசுவும், கெளடாவும் கல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். இக்கூட்டத்திற்குப் பிறகு இருவரும்செய்தியாளர்களிடம் கூறுகையில், முந்தைய ஐக்கிய முன்னணி போன்ற மூன்றாவது அணி ஒன்றை விரைவில் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.மதவாத பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசுக்கு இப்போது நல்ல நேரம் இல்லை. மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய தருணம்வந்துள்ளது. 1996-97ல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஐக்கிய முன்னணி மீண்டும் உருவாக வேண்டும். அதற்கான முயற்சிகளில்தான் நாங்கள்ஈடுபட்டுள்ளோம்.
வி.பி.சிங் தலைவராகலாம்:
மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு வி.பி.சிங் தலைவராகலாம் என்று கூறப்படுகிறது. ஜோதிபாசுவுக்கு 85 வயதுஆகி விட்டதாலும், தலைமைப்பொறுப்பில் அவர் நாட்டம் இல்லாமல் இருப்பதாலும், அவருக்கு அடுத்து மூத்த தலைவரான வி.பி.சிங்கிற்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம்என்று கூறப்படுகிறது.
மூன்றாவது அணியில் சேர்வது குறித்து ராஷ்டிரிய ஜனதாதலம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகளுடனும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பு கொண்டுள்ளது.
தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடவின் தெலுங்கு தேசத்தையும் மூன்றாவது அணிக்கு இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஜோதி பாசு தெரிவித்தார். நாயுடு வருவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications